ஏறத்தாழ ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராவிட்டது சீனா என்று இன்றைய ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் தொழில் அமைச்சர் சான் டெமிங் அடுத்த ஆண்டு தனது பரிவாரங்களுடன் ஐரோப்பா வருகிறார். சீனாவின் பாரிய முதலீடுகளை ஐரோப்பிய மண்ணில் இறக்குவதற்கு அவர் வருகிறார். முதல் கட்டமாக 2.200 பில்லியன் குறோணர் பெறுமதியான முதலீட்டை சீனா செய்ய இருக்கிறது. இதுவரை சீன முதலீடுகளுக்கு தடை போட்டுவந்த
ஐரோப்பா வேறு வழியற்ற நிலையில் தனது கதவுகளை திறந்துவிடுகிறது. ஐரோப்பாவில் அமெரிக்க – பிரிட்டன் முதலீட்டு முறைகளை தழுவியே சீனாவும் முதலிட வருகிறது. இந்த முதலீடுகள் தொழிற்பட ஆரம்பித்தால் ஏறத்தாழ ஐரோப்பாவின் ஈரல்க்குலை சீனாவின் சிகப்புக் கரங்களுக்குள் சிக்குப்பட்டுவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை நேற்று முன்தினம் வெளியான ஓஈசிடி அறிக்கை ஐரோப்பாவின் பொருளதாரம் மட்டுமல்ல பிரிட்டனின் பொருளாதாரமும் மீண்டும் ஒரு தடவை வீழ்ச்சித்தடத்தில் குப்புற விழப்போகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பிரிட்டன் பாரிய வேலை நிறுத்தங்களை சந்திக்கும் விளிம்பு நிலையில் நிற்கிறது என்றும் எச்சரித்துள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார நிலையையும், அதன் மந்தமான போக்கையும் உணர்ந்து சீனா, இந்தியா இரண்டு நாடுகளும் நடக்க வேண்டுமென உலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. சீனா இந்த எச்சரிக்கையை புரிந்து கொண்டளவுக்கு இந்தியாவால் புரிய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓஈசிடியின் எதிர்கால உலகப் பொருளாதாரம் பற்றிய விலாவரியான நோக்கு என்ற புதிய நூல் எதிர்கால பொருளாதாரப் போக்கை தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. அலையின் உச்சியில் நிற்கும் ஒரு கப்பல் பொத்தென கீழே வந்தது முதல் வீழ்ச்சியாகும். அப்படி வீழ்ந்த பொருளாதாரம் அடுத்த அலையில் ஏறாமல் மறுபடியும் வீழ்வது பெரும் சோகமாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக