தில்லி பாட்லா இல்லத்தில் 2008-ல் நடந்த என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தில்லி ஜந்தர் மந்தரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.
பாட்லா இல்ல என்கவுன்ட்டரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முஸ்லிம் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
ஜமியா நகரில் உள்ள பாட்லா இல்லத்தில் இருந்து ராஷ்ட்ரீய உலேமா கவுன்சில் உறுப்பினர்கள் ஜந்தர் மந்தருக்கு பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாட்லாவில் நடத்தப்பட்டது போலி என்வுகன்ட்டர் என்றும், இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பாட்லா என்வுகன்ட்டரில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டதை மட்டுமின்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா கொல்லப்பட்டது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய உலேமா அமைப்பின் தேசிய தலைவர் ஆமிர் ரஷாதி மதானி கேட்டுக்கொண்டார்.
இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களும் அப்பாவிகள். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களில் (செப்.19) தில்லியில் உள்ள பாட்லா இல்லத்துக்குள் இந்திய முஜாகிதீன் சிலர் பதுங்கியிருப்பதாகப் போலீஸôருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தில்லி போலீஸôர் என்கவுன்ட்டர் நடத்தினர்.
இதில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் தில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவும் கொல்லப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக