ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு உறுப்புரிமை தரவேண்டும் என்று கேட்கும் பிரேரணையை சற்று முன்னர் ஐ.நா செயலரிடம் வழங்கி பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் உரையாற்றினார்.
இஸ்ரேல் புரியும் தொடர்ந்தேர்ச்சியான அடாவடித்தனங்களால் பாலஸ்தீன மக்கள் மனிதர்களாகவே வாழ முடியவில்லை என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச சட்டங்களை எல்லாம் இஸ்ரேல் மீறியுள்ளது, தொடர்ந்து பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றங்களை நடாத்தியபடியே இருக்கிறது. எத்தனையோ தடவைகள்
ஐ.நாவின் பாதையில் முயற்சி எடுத்தும் அத்தனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.கிழக்கு எருசெலேம் பகுதியில் கட்டிடம் கட்டவோ வாழவோ எமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. முக்கியமான எருசேலேம் மையப்பகுதிக்கு பாலஸ்தீனரை போக அனுமதி மறுக்கப்படுகிறது. பாலஸ்தீன குடியிருப்புக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடாத்தப்படுகிறது. பாலஸ்தீன காஸா வட்டகையில் சட்டம் ஒழுங்கு குலைய இஸ்ரேலே காரணமாக உள்ளது. அதே நேரம் அத்துமீறிய குடியேற்றங்களையும் நடாத்துகிறது. இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுத்தினால் மட்டுமே மேற்கொண்டு பேச முடியும். நிறைவாக பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரியுங்கள் என்று கேட்ட அவர் இந்த நீதியான பிரேரணையை யாரும் எதிர்க்க எந்தவித நியாயமும் இல்லை என்றும் தெரிவித்தார். உலகம் என்ன சொல்கிறது என்பதை அறிய நாம் ஆசைப்படுகிறோம்.
இதன் பின்னர் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகு சன்னத ஏற்றமடைந்து பேசினார். ஐ.நாவில் உறுப்புரிமை பெறுவதன் மூலமாக பாலஸ்தீன நாட்டை அடைந்துவிட முடியாது அது சரியான வழியல்ல என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக