விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னங்குப்பம், துத்திப்பட்டு ஆகிய கிராமங்கள் ஒரே ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சியில் பொன்னங்குப்பத்தில் 1174 ஓட்டுகளும், துத்திப்பட்டில் 2274 ஓட்டுகளும் உள்ளது.
எனவே இந்த ஊராட்சி தலைவர் பதவியை ஒவ்வொரு முறையும் துத்திப்பட்டு கிராமத்தினரே நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இதனை துத்திப்பட்டு கிராமத்தினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஊராட்சி தலைவர் பதவியை கடந்த 2001-ம் ஆண்டு
முதல் ஏலம் விட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இந்த ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.இதே போல் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.
கோவில் திருவிழா நடத்துவது போல ஆலோசனை கூட்டத்தை கூட்டி இந்த ஏலம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் பதவி ரூ.8 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை செஞ்சியில் போலீஸ்காரராக உள்ள அண்ணாமலையின் மனைவி அம்சா ஏலம் எடுத்தார்.
அதுபோல் ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஞானவேல் என்பவர் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்துக்கும், வார்டு உறுப்பினர்கள் பதவியை பரமசிவம், கோபால கிருஷ்ணகாந்தி, சத்தியபாமா, பச்சையப்பன், கதிர்வேல் ஆகியோரும் ஏலம் எடுத்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சி தலைவர் பதவி ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த முறை ஊராட்சி தலைவர் பதவி 2 மடங்குக்கு அதிகமாக ஏலம் போனது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக