புதுடெல்லி:நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள்(1&2 )ஆகிய முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஹிந்துத்துவா அமைப்புகளே முக்கிய காரணமாக உள்ளது என்று டெல்லியில் நடைபெற்ற டி.ஐ.ஜிக்களின் ஆண்டு மாநாட்டில் புலானாய்வுக் குழுவின் சிறப்பு இயக்குநர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் தெரிவித்தாவது; ‘காவி தீவிரவாத அமைப்பு தங்கள் முகத்தை இந்த தாக்குதல்களில் வெளியே கொண்டு வந்துள்ளது என்றும், இந்த நான்கு சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்த அவர்கள், மீதி 12 தாக்குதல்கள் பற்றி எந்த வித செய்தியையும் வெளியிடவில்லை.
ஏழு பேரை கொன்று குவித்த மாலேகான் குண்டுவெடிப்பில் பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாகூர் மற்றும் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக 2008-ல் கைது செய்யப்பட்டு 2009-ல் அவர்கள் மீதும் மற்றும் சிலர் மீதும் குற்றப்பத்திரிக்கை அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த நான்கு முக்கிய சம்பவங்களுக்கும் இவர்களே காரணம் என்ற உண்மை கண்டறியப்பட்டு முக்கிய குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த சுவாமி அசீமானந்தாவை நவம்பர் 2010-ல் கைது செய்தனர்.
மேலும் 2007-ல் நடைபெற்ற பல தீவிராவாத தாக்குதலுக்குப் பின், நாட்டின் முக்கிய நகரங்களான ஜெய்பூர், அஹமதாபாத் மற்றும் டெல்லியில் நடைப்பெற்ற அனைத்து குண்டு வெடிப்பிலும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் இளைஞர்களே காரணம் என்று விசாரணையின் பெயரில் கைது செய்ததோடு, இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பே காரணம் என்று பெயர் சூட்டியது. ஆனால் உண்மையில் இவை அனைத்திற்கும் பின்னால் காவி தீவிரவாதமே காரணம் என்பதை யாரும் வெளிபடுத்தவில்லை.
மேலும் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற நேசனல் இன்டகிரேஷன் கவுன்சிலிலும் இதைப்பற்றி உரையாடப்பட்டது. நாட்டின் சட்டம் மற்றும் விசாரணை குழு அனைத்தும் சிறுபான்மையினருக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்றும், உண்மையை கண்டறிய தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார் என்றும் இந்த மாநாட்டில் தெரிவித்தனர்.
News@thoothu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக