தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.8.11

சட்டவிரோத கட்டிட பணிக்கு இஸ்ரேல் அனுமதி


isreal occupied
டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் 900 வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
கிழக்கு ஜெருசலத்தில் ஹர் ஹோமாவில் சர்வதேச எதிர்ப்புகளை புறக்கணித்து சட்டவிரோதமாக யூத குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வசிப்பிட பிரதேசத்தில் நெருக்கடியை சமாளிக்க வீடுகள் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்ற
மையங்கள் அதிகமான பகுதிதான் கிழக்கு ஜெருசலத்திலுள்ள ஹர் ஹோமா. தற்போது ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசிப்பிடங்கள் இங்கு உள்ளன. இப்பிரதேசத்தில் மீண்டும் வீடுகளை கட்டுவதற்கான இஸ்ரேலின் முயற்சி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என பல்வேறு அமைப்புகள் கூறுகின்றன.
தற்போது பலஸ்தீன்-இஸ்ரேல் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியதற்கு முக்கிய காரணம் மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத குடியேற்றங்களாகும்.

0 கருத்துகள்: