காபூல்:கிழக்கு ஆப்கானிஸ்தானில் வார்தக் மாகாணத்தில் நேட்டோ ராணுவத்தின் ஹெலிகாப்டர் தகர்ந்து விழுந்ததில் அமெரிக்க சிறப்பு படையின் 31 பேரும், ஏழு ஆப்கானிஸ்தான் படையினரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுக்கொண்டது.
நேட்டோ ராணுவத்துடனான போரில் நாங்கள்தாம் ஹெலிகாப்டரை வீழ்த்தினோம் என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸஃபியுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார். ராக்கெட் தாக்குதல் மூலம் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு ஸாயித் ஆபாத்தில் ஒரு வீட்டில் மறைந்திருந்த தாலிபான் போராளிகளை நேட்டோ ராணுவம் தாக்கியபொழுது தாலிபான் ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தியதாக ஸபியுல்லாஹ் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதை நேட்டோவும் ஒப்புக்கொண்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக