மும்பை, ஜூலை. 31- இனவெறியை தூண்டும் விதமாக பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா சிறுபான்மையின ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மும்பையிலிருந்து வெளிவரும் ஆங்கில
நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதிய சுப்பிரமணிய சாமி, இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்துக்கள் அல்லாதவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.இந்நிலையில் சாமியின் இந்த கருத்து இனவெறியை தூண்டுவதாக உள்ளது என்றும், அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 153(ஏ) பிரிவின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா சிறுபான்மையின ஆணையத்தின் துணை தலைவர் ஆப்ரகாம் மாதாய், மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். சாமியின் இந்த இனவெறி கட்டுரை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதும், சமூக பொறுப்பற்ற மற்றும் முற்றிலும் இஸ்லாமிய விரோதமானதும் ஆகும் என்றும் அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக