தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.6.11

அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க போகிறது : அல் கைதாவின் புதிய ஒளிநாடா



மேற்குலக படைகளை விரட்டும் வரை எமது போராட்டம் தொடரும் என அல்கைதா தலைவர்களில் ஒருவரான அல் ஜவாஹிரி அறிவித்துள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், அல் ஜவாஹிரி புதிய ஒளிநாடா மூலம் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் பழி தீர்ப்போம்.
ஒசாமா பின் லேடன், உயிருடன்
இருந்த போதும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார். உயிரிழந்த பின்னரும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார். அவருக்கு இறைவன் கருணை காட்டுவார்.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் தொடர்ந்து இருப்பதற்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறோம். அவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையே அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் கூறினார்.  சுமார் 28 நிமிட அவரது உரை, ஜிகாத் அமைப்பினது ஆன்லைன் ஃபோரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னரே, இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பது, அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடிகளை தோற்றுவித்திருக்கிறது.

0 கருத்துகள்: