டெக்ரான், பாகிஸ்தானின் அணுஉலை கூடங்களை தாக்கி சேதப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக ஈரான் அதிபர் முக்மூத் அகமதினிஜாத் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
ஈரான் அதிபர் முக்மூத் அகமதினிஜாத் டெக்ரானில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் அரசாங்கத்தையும், மக்களையும்
பலவீனப்படுத்துவதற்காகவும் பாகிஸ்தானை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் பாகிஸ்தானின் அணுஉலை கூடங்களை தாக்கி சேதப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக அது திட்டம் தீட்டி வருகிறது என்று எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. பாகிஸ்தானில் தன் ராணுவத்தை பெரும் அளவில் நிறுத்துவதற்காக அது ஐ.நா. பாதுகாப்பு சபையையும் பயன்படுத்த இருக்கிறது. இவ்வாறு அகமதினிஜாத் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக