இஸ்லாமாபாத், ஜூன். 30 - இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார்.
ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை. இந்தியா தற்போது பல அதிநவீன போர்க் கருவிகளை கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானை விட 6 முதல் 7 மடங்கு பெரியது. மேலும், வர்த்தக பரிமாற்ற அளவும் எங்களை விட 5 முதல் 6 மடங்கு பெரியதாகும். இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் தொடர்ச்சியாக 20 அல்லது 22 நாட்களுக்கு தான் பாகிஸ்தானால் தாக்குபிடிக்க முடியும். ஆனால், இந்தியாவால் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக போரை நடத்த இயலும். பாகிஸ்தானால் அவ்வளவு நாட்கள் தொடர்ந்து போர் புரிய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இராணுவ ரீதியாக பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு. இராணுவரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை. இந்தியா தற்போது பல அதிநவீன போர்க் கருவிகளை கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானை விட 6 முதல் 7 மடங்கு பெரியது. மேலும், வர்த்தக பரிமாற்ற அளவும் எங்களை விட 5 முதல் 6 மடங்கு பெரியதாகும். இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் தொடர்ச்சியாக 20 அல்லது 22 நாட்களுக்கு தான் பாகிஸ்தானால் தாக்குபிடிக்க முடியும். ஆனால், இந்தியாவால் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக போரை நடத்த இயலும். பாகிஸ்தானால் அவ்வளவு நாட்கள் தொடர்ந்து போர் புரிய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக