தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.6.11

பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு காங்கிரஸ் செய்த தவறு தான் காரணம்:திக் விஜய்சிங்


உத்தரபிரதேச மாநிலத்தில் 1992 ம் ஆண்டு பாபரி மஜ்ஜித் இடிப்பை தடுக்கத் தவறியது அப்போது பஹுஜன் சமாஜ் வாடியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் தவறு என அக்க்கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங்க் கூறியுள்ளார்.
“காங்கிரஸ் கட்சி செய்த இரண்டு மிகப் பெரிய தவறுகள் ஒன்று பாபரி மஜ்ஜிதை இடிக்க விட்டது மற்றொன்று பஹுஜன் சமாஜ் வாடி கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்தது”
. என “ஆப கி அடல்ட்” என்ற இந்திய தொலைகாட்சி உரையாடல் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியுள்ளார்.
அன்னா ஹாசரே ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் லோக் பால் மசோதாவின் திருத்தங்கள் கோரி நடத்திய உண்ணாவிரதத் திட்டங்களைப் பற்றிக் கூறுகையில் அன்னா ஹாசரேவை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். பாராளுமற்றக் கூட்டங்களுக்குப் பின் பொதுமக்களின் கலந்தாலோசனைகளுக்குப் பின் இறுதி அறிக்கை வரும் வரை பொறுமையோடு இருக்குமாறு கூறினேன் என தெரிவித்தார்.
“நான் எனது இரு கரங்களைக் கூப்பி உண்ணா விரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டேன், குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சென்று பின் அங்கிருந்து நிலுவைக் குழு பொது ஜனங்களின் கருத்தைக் கோரும் வரை காத்திருக்கும் படிக் கூறினேன் “ எனக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்க் கூறினார்.
பிரதம மந்திரியை லோக் பால் மசோதாவின் கீழ் கொண்டு வருவது பற்றி திக் விஜய்சிங்க் தனது கடும் எதிர்பை தெரிவித்தார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாத நபர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நாட்டின் பிரதம மந்திரியின் மீது அதிகாரம் செலுத்த எந்த நபரும் சக்தி அற்றவர்.
“ஐந்து நபர்கள் கொண்ட லோக்பல் கமிட்டி நூறு கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க முடியாது”, ஹாசரே மற்றும் அவரின் சமூக தேர்வாளர்கள் இணைந்து லோக்பல் அறிக்கையை தயாரிப்பர்.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி ஒரு எந்த அதிகாரமும் அற்ற தனி நபர் ஒருவரால், அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவரால் விசாரிக்கப் பட முடியாது என்பதை தான் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் அந்நபர் வெளியில் இருந்து தனி நபரால் வரும் அழுத்தங்கள் மூலமும் தவறாக முடிவு எடுக்க முடியும், இதற்க்கு ஒரு தனி பாதுகாப்பு செயல்பாடு திட்டமிடப்பட வேண்டும்”. எனவும் அவர் கூறினார்.
பாபா ராம்தேவ பற்றி கூறுகையில் அவரை கடுமையாக சாடினார். அவன் ஒரு பெரிய திருடன் தன்னுடைய ஆயுர்வேத மற்றும் யோகா யுக்திகளை வெளி நாடுகளில் வியாபாரமாக செய்து வருகிறான். “அவன் ஒரு துறவி சாமியார் இல்லை, துறவி சாமியாராக இருப்பவர்கள் வணிகம் செய்பவராக இருக்க முடியாது. அவர் யோகா மூலம் மக்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கிறார். அவன் ஒரு “மகா திருடன்” என்ற என்னுடைய கருத்தில் நான் உறுதியாக  உள்ளேன்”.
காங்கிரசின் இளைய தலைவர் ராகுல் காந்தி எனது வாழ் நாளிற்க்குள் பிரதம மந்திரியாக வேண்டும். அதே நேரத்தில் பிரதம மந்திரி மன்மோகன் சிங்க் சிறப்பாக செயலாற்றுகிறார் எனவும் கூறினார்.

0 கருத்துகள்: