சென்னை, ஜூன். 23- ஏழைப் பெண்களுக்கு தரமான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தயாரித்து வழங்குவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தப் பொருட்கள் தொடர்பான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
ஏழைப் பெண்களுக்கு இலவசமாக மிக்சி,
கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ரேசனில் 20 கிலோ இலவச அரிசி, திருமண உதவியுடன் தாலிக்கு அரை பவுன் தங்கம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். அதுபோல ஏழைப் பெண்களுக்கு இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 25 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இந்தப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டது. இப்பொருட்களின் முதல்கட்ட கொள்முதலுக்காக ரூ.1,250 கோடி உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிவில் சப்ளை கார்பரேஷன் தலைமை அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் வீர சண்முகமணி முன்னிலையில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தயாரிக்கும் நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களது தயாரிப்புகள் பற்றிய செயல் விளக்கம் செய்து காட்டினார்கள். இதில், 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. அப்போது, மூன்று பொருட்களும் தரமானவைகளாக இருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தயாரிப்பு நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த அரசு அதிகாரிகள் கூறுகையில், 500 வாட் திறன் கொண்ட மிக்சியுடன் 2 ஜார்கள் வழங்க வேண்டும். அதில் ஒன்று ஒரு லிட்டர் அளவு, மற்றொன்று அரை லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும். ஜார்கள் ஸ்டெயின்லஸ் ஸ்டீலைக் (துருப்பிடிக்காதவை) கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.
டேபிள் டாப் கிரைண்டர் 2 லிட்டர் கொள்ளளவுடன் இருத்தல் அவசியம். அதன் டிரம் துருப்பிடிக்காத தகட்டில் செய்யப்பட வேண்டும், அதன் மோட்டார் நீண்டகாலத்திற்கு உழைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மின்விசிறியும் (டேபிள்பேன்) தரமானதாக இருக்க வேண்டும். அனைத்துப் பொருட்களுக்கும் குறைந்தது 2 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்த செயல்முறை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிறுவனங்களின் அனுபவம், தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் சர்வீஸ் சென்டர்கள் ஆகியவை குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். நேற்று காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மிக்சி மற்றும் மின்விசிறியைப் பொறுத்தவரை சென்னை, மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களில் இருந்தும், கிரைண்டரைப் பொறுத்தவரை கோவையில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.
மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தயாரித்து கொடுக்க முன்வரும் நிறுவனங்கள் டெண்டர் கொடுக்க அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையில் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் டெண்டர் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிறுவனத்தின் தொழில்நுட்ப தரம், விலை விவரம் ஆகியவை பற்றி ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு, அடுத்த மாதம் கடைசியில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை தயாரித்துக் கொடுக்க அதிகாரப்பூர்வ ஆணை வழங்கப்படும். அந்த அடிப்படையில் டெண்டர் பெற்ற நிறுவனங்கள் மேற்கண்ட 3 பொருட்களையும் வேகமாக தயாரித்து வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் வழங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக