தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.6.11

ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூன் மீண்டும் தேர்வு

நியூயார்க், ஜூன். 22-   ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

67 வயதான தென் கொரிய முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கி மூனை 192 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2012 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட
இருப்பதாக பான் கி-மூன் 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். பாதுகாப்பு சபையும் அவருக்கு ஆதரவு அளித்தது. தன்னை மீண்டும் பொதுச்செயலர் பதவிக்கு தேர்ந்தெடுத்து மிகப் பெரிய கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக பான் கி-மூன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

0 கருத்துகள்: