
அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது.
"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர்.
இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே.
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர்.
கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக