தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.4.11

பிரான்ஸில் பர்தா, நிகாப் அணிய தடைச்சட்டம் அமுலுக்கு வருகிறது : எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன


பிரான்ஸில் இஸ்லாமியர்கள் பர்தா மற்றும் ஹிஜாப்அணியத் தடைவிதிக்கப்படுவதற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை,
மற்றும் இன்று திங்கட்கிழமை, அமைதியான முறையில் கண்டன பேரணி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கண்களை மட்டும் காட்சிப்படுத்திக்கொண்டு, முகம், உடல் என்பவற்றை முழுவதுமாக மூடியபடி ஆடை அணிந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தலையை மாத்திரம், போர்த்தியபடி ஆடையணிந்து வருவதற்கு தடைவிதிக்கப்படவில்லை. என கூறியுள்ள் பிரான்ஸ் பிரதமர்
ன்ஸுவாஸ் பிலியொன், பர்தா (முகத்தையும் மூடியபடி) அணிவதற்கே  இன்று முதல் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இத்தடை தொடர்ந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தடையை மீறுபவர்களுக்கு 150 யூரோ தடை விதிக்கப்படும் எனவும், பர்தா அல்லது நிகாப் அணியுமாறு யாரும் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு 30,000 யூரோ தண்டனைப்பணம் அறவிடப்படுவதுடன், இரண்டு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என பிரான்ஸின் இப்புதிய சட்டம் கூறுகிறது.

82% வீதமான பிரான்ஸ் மக்கள் இத்தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 17% வீதமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்தே இவ் ஆர்ப்பாட்ட ஊர்லவமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: