தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.4.11

அமைதித் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டார் கடாபி - தென் ஆபிரிக்க ஜனாதிபதி அறிவிப்பு


அமைதித் திட்டத்திற்கு லிபியாவின் கடாபி தலைமையிலான அரசு ஒத்துக்கொண்டுள்ளதாக
தென் ஆபிரிக்கா ஜனாதிபதி ஜாகாப் சுமா கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த பெப்ரவரி மாதம் 15ம் திகதியிலிருந்து கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் புரட்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புரட்சிபடையினர் மற்றும் கடாபி
ஆதரவு படையினர் இடையே வன்முறை பெருகியதை அடுத்து ஐ.நா லிபியா மீது பல தடைகளை விதித்தது தொடர்ந்து யுத்த நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தார் கடாபி.
அதன் பின்னரும் பொதுமக்கள் கொல்லப்படுவதாக தெரிவித்த ஐ.நா அதன் துருப்புக்களை அங்கு அனுப்பி கடாபியின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் நிலமை இன்னும் மோசமானது.

இதனிடையே தற்போது ஆப்பிரிக்க கூட்டமைப்பின் அமைதித் திட்டத்திற்கு கடாபி சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்டபியா நகரில் லிபிய ராணுவத்தினர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர் எனவும் 25 பீரங்கிகளை தகர் நேட்டோ படை விமானங்கள் தகர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: