புதுடெல்லி:’இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
அறிவுப்பூர்வமான-வளர்ச்சி மற்றும் எதிர்கால அமைதிக்கான வழிதடம் அமைத்தல் என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலாண்மை குறிக்கோள்களுக்கான கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழாவையொட்டி இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் “நீங்கள் முஹம்மது கஜினி எவ்வாறு கோவில்களை இடித்தார் மேலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் எவ்வாறு ஹிந்து மக்களை மதம் மாற்றினார்கள் என்ற வரலாற்று செய்திகளை மட்டுமே படித்திருப்பீர்கள். திப்பு சுல்தான் போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் 153 கோவில்கள் கட்டுவதற்கு பொருளாதார உதவிகள் செய்திருக்கிறார் என்ற வரலாற்று செய்திகளை எப்போதும் படித்திருக்க மாட்டீர்கள்” என உருது மொழியில் ஆர்வமுடையவரான கட்ஜு கூறினார்.
இது போன்ற வரலாற்று செய்திகள் மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மட்டுமே கூறிவந்துள்ளார்கள். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போன்றவர்கள் இத்தகைய வரலாற்று செய்திகளை வெளிப்படையாக கூறுவது இதுவே முதல் முறையாகும்.
உத்தரபிரதேசத்தைப் பற்றி கூறுகையில் அவ்தாஹ் பகுதீன் நவாப் மதசார்பற்ற நடுநிலையான அவரின் செயல்பாடுகளுக்காகவே பேசப்பட்டவர் என்று உதாரணங்களையும் மேற்கோள்காட்டி கூறினார்.
நம்முடைய குடிமையியல் பற்றிய இந்திய வரலாற்றில் இது போன்ற முக்கியமான பகுதிகள் மறைக்கப்பட்டது தான் இந்தியாவில் மத துவேச சக்திகள் வளர்ச்சியடைய காரணமாகின. ஆனால் இந்தியா பல்வேறு வேறுபாடுகள் கொண்ட கலாசாரங்கள் உள்ள நாடு மதச்சார்பற்ற தன்மை இல்லாமல் இந்தியாவில் வாழவே முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்தியா ஒரு குடியேற்றவாசிகளின் நாடு “இந்திய கலாசாரம்” என்பது “சமஸ்கிருதம்-உருது” கலாசாரம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த முஸ்லிம் தலைவரும் அறிவியலாளர்களுக்கான ஐ.ஒ.எஸ் என்ற அமைப்பை உருவாகியவருமான செய்யத் ஷகாபுதீன் கூறுகையில்; “சமூக ஆய்வாலர்களுக்கான இந்த அமைப்பு அறிவுக்கூர்மை மற்றும் அரசியல் சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சமூக மாற்றத்திற்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கலாம்” என்று இம்மாநாட்டில் பேசினார்.
ஐ.ஒ.எஸ்- இன் சேர்மன் டாக்டர் மன்சூர் சிறப்புரையாற்ற மாநாடு நிறைவு பெற்றது. இம்மாநாட்டில் தேசிய அறிவுவள ஆணையக் குழுவின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறியும் , சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமவாய்ப்பு வழங்கும் குழு ஒன்றை நியமிக்கக் கோரியும் இம்மாநாட்டில் கோரிக்கை விடப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக