டெஹ்ரான்:ஈரானுக்கும், அரபு நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்க அமெரிக்கா முயல்வதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் இந்த முயற்சி நிறைவேராது என அஹ்மத் நஜாத் ராணுவ தின அணிவகுப்பில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் பொழுது குறிப்பிட்டார்.
ஷியா-சுன்னிகளுக்கிடையே வெறுப்பை விதைக்க
அமெரிக்கா முயல்கிறது. ஈரானுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், அம்முயற்சி தோல்வியை சந்திக்கும். சொந்த ஆதாயங்களை பாதுகாப்பதற்காகவே அமெரிக்கா இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா நேர்மையான நண்பன் அல்ல.சொந்த நண்பர்களுக்கு எதிராகவும், தங்களுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு எதிராகவும் வாளை உருவிய அனுபவம் அமெரிக்காவிற்கு உண்டு .உலக நாடுகளுக்கிடையே அமெரிக்காவிற்கு ஒரு கண்ணியமான இடமில்லை என்பது அமெரிக்கா புரிந்துக்கொள்ளவேண்டும்.
ஈரான் உலக நாடுகளின் உற்ற நண்பன். ஆணவத்தின் புதிய சதித்திட்டத்தை மக்கள் மற்றும் அவர்களை வழிநடத்தும் தலைவர்களின் எச்சரிக்கை உணர்வு தோல்வி அடையச்செய்யும். இஸ்ரேலின் சியோனிச ஆட்சியை பாதுகாப்பதற்கான அமெரிக்க தலைவர்களின் முயற்சி பலன் தராது .இவ்வாறு நஜாத் உரை நிகழ்த்தினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக