இன்று மாலை (25-02-2011) குவைட்,இராக்’கின் பஸ்ரா பகுதிகளில் வரலாறு காணாத (வரலாறு வந்து சொல்லிச்சா?) மணல் காற்று வீசியது.மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்த மணல் காற்றில் இரவு 8.00 மணிவரை நீடித்தது. (டின்னர் லேட் ஆச்சுல்ல....) பயங்கர காற்றும் அள்ளி வீசும் மணலும் (மணல் காற்றுல மணல்தான்யா வரும்) எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும், கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.
* இன்றுதான் மொத்த வேலைத்தளத்தினதும் சுத்தம் செய்யும் வேலை முடிந்தது. மறுபடி நாளை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
* புயல் வரும் முன்னே நம்முடன் வேலை செய்யும் செர்பிய நாட்டு முதியவர், அழைத்துக் கொண்டு போய் காட்டியதால், கொஞ்சம் போட்டோ எடுக்க முடிந்தது.
* புயல் வருவதை பார்த்ததுமே நம்ம கூட வேலை பார்க்கும் கர்நாடக நபர் ஒருவர் “ அய்யோ... 2012’க்கு முன்னே உலகம் அழியப்போகுதே”னு ஒப்பரி வைக்க தொடங்கி விட்டார்.
ஏற்கனவே ”சூப்பர் மூன்” விஷயத்தில்( சோதிடத்டை நம்பி) பயந்து கொண்டிருந்தவர், புயலை பார்த்ததும் பண்ணிய அலப்பரை தாங்க முடியலப்பா.....
*Office Room, Bed room எல்லம் மணல் காடாய் இருக்கிறது. என்ன பண்ணலாம்???????
மிக முக்கியமாம செய்தி
ரொம்ப நாளாக கழுவாமல் பாதுகாத்து வந்த என் காலுரைகளை நேற்றுதான் மக்கள் நலன் கருதி கழுவி காய போட்டேன். அதையும் புயல் தூக்கிடுச்சு. (புயல் வந்ததே அதனாலதான்யா) அது கிடைக்க அனைவரும் பிரார்த்திக்கவும். (Cool...Cool.. சின்ன பசங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா....)
நான் கிளிக்கிய போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சேர்பிய நன்பர் |
சைனா காரன் தில்’ல பார்தீங்களா...... |
ஓடுங்கப்பா..... ஓடுங்கப்பா..... |
புயல் நம்மள வந்தடைந்த போது..... |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக