
ஜாகர்தா, நவ.10- இந்தோனேசியாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியை அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று பார்வையிட்டார். இஸ்டிக்லால் மசூதிக்கு வந்த ஒபாமாவிடம் அதன் சிறப்பு குறித்து இமாம் விளக்கினார். அதன் அருகில் உள்ள தேவாலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவின்போது மசூதியின் வாகன நிறுத்துமிடத்தை தேவாலயத்துக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதாக இமாம் எடுத்துக் கூறினார். இத்தகவலை பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஒபாமா சுட்டிக்காட்டினார். இந்தோனேசியாவில் பல்வேறு மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கு இந்த மசூதி ஓர் உதாரணம் என்று ஒபாமா குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக