ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.2002-100 பேர், 2010-4 பேர், 2009-6 பேர், 2007- 9 பேர், 2006-17 பேர், 2005-40 பேர், 2004- 62 பேர், 2003-52 பேர், 2001- 76 பேர், 2000-35 பேர், என புள்ளிவிபரம் கூறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர்
16.12.10
20 ஆண்டுகளில் காஷ்மீறில் கொல்லப்பட்ட தலைவர்கள் 697 பேர்.
ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.2002-100 பேர், 2010-4 பேர், 2009-6 பேர், 2007- 9 பேர், 2006-17 பேர், 2005-40 பேர், 2004- 62 பேர், 2003-52 பேர், 2001- 76 பேர், 2000-35 பேர், என புள்ளிவிபரம் கூறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர்
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: ஹிந்துதுவா அமைப்புகள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்.
ஹைதராபாத்,டிச:ஹைதராபாத்தில் உள்ள மக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த இருவரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஹைதராபாத் மக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு நடைபெற்ற வன்முறையை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.
இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது
15.12.10
இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
இதுத் தொடர்பான நடவடிக்கைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாக எடிசலாத்தின் சீனியர் துணைத்தலைவர் அப்துல்லாஹ் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட வாய்ப் கால் கட்டமைப்பை துவக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேவையாளர்களான எடிசலாத்தும் டூவும் கடந்த ஜூலை மாதம் வாய்ப் கால் வசதியை துவக்கப்போவதாக அறிவித்திருந்தன. ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் இத்திட்டம் காலதாமதமானது. அதிகாரப்பூர்வ இண்டெர்நெட் கால் வசதி நடைமுறைக்கு வருவதன்மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சொந்த நாட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிகநேரம் பேசும் வாய்ப்பு ஏற்படும்.
தற்பொழுது அனுமதி பெறாத இண்டெர்நெட் வாய்ப் கால் சேவையாளர்களின் மூலம் பலர் தொடர்புக்கொண்டு வந்தாலும், ஒருவித அச்சத்துடனே அதனை பயன்படுத்துகின்றனர். இனி, அதிகாரப்பூர்வ இண்டெர்நெட் கால் வசதி கிடைப்பதால் பயமின்றி உரையாடலாம்.
இந்தியாவிற்கான மொபைல், தொலைபேசி கட்டணங்களை எடிசலாத்தும், டூவும் குறைத்த பொழுதிலும் சாதாரண மக்களுக்கு பொருளாதார சிக்கலையே ஏற்படுத்தி வந்தது.
பிரபல வாய்ப் கால் சேவை நிறுவனமான ஸ்கைப் யு.ஏ.இ மார்க்கெட்டில் நுழைய முயற்சிச்செய்து வருகிறது. ஆனால் எடிசலாத்திற்கும், டூவிற்கும் மட்டுமே அனுமதியுள்ளது என யு.ஏ.இ தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
செய்தி:மாத்யமம்
கர்நாடகா - சங்க்பரிவாரின் ராம ராஜ்யமா?
எண்பதுகளின் இறுதியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ராஜீவ் காந்தி சந்தித்த கடுமையான சோதனைகளில் ஒன்று கர்நாடகா மாநிலத்தில் வருடந்தோறும் புதிய முதல்வர்களை நியமித்ததுதான்.ராஜீவ் காந்தியின் அகால மரணத்திற்கு பின்னர் தலைவனில்லாத இயக்கமாக மாறிய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் விளங்கினர். காங்கிரஸின் உருக்கு கோட்டையாக இருந்த கர்நாடக மாநிலத்தில் 1991-ல் அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றிய பொழுது முதல்வராக பதவியேற்ற வீரெந்திர பாட்டீலின் பதவிக்கு ஒரு ஆண்டு ஆயுள் கூட முழுமையாக இல்லை.
உள்கட்சிப் போர் ஒருபுறம் ஜாதீய சக்திகளின் ஆதிக்கம் மறுபுறம் இந்நிலையில் எஸ்.பங்காரப்பா கர்நாடகா மாநில முதல்வராக பொறுப்பேற்றார். ஆனாலும், காங்கிரஸ் தனது வழக்கமான குணத்தை கைவிடவில்லை. பங்காரப்பாவின் ஆட்சி ஒரு ஆண்டை நிறைவுச்செய்யும் முன்பே உள்கட்சிப் பூசலினால் மீண்டும் அதிகாரப்போட்டி தலைதூக்கியது.
எம்.எல்.ஏக்களை டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் முன்னால் ஆஜர்படுத்தி, முதல்வர் மீதான நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்துதல் என காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் போர் கலாச்சாரத்தின் காரணமாக டெல்லிக்கும் கர்நாடகாவுக்குமிடையே அடிக்கடி பயணம் மேற்கொண்ட பங்காரப்பா 1992 நவம்பரில் தனது முதல்வர் பதவியையும் இழக்க நேர்ந்தது. அடுத்து வீரப்ப மொய்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். தமக்கு முன்னால் பதவியிலிருந்தவர்களின் வழிமுறையைத்தான் வீரப்பமொய்லியும் பின்பற்றினார்.
ஊழல்கள் மலிந்த சூழலில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த கர்நாடகா மக்கள் விரும்பவில்லை. மாநில ஆட்சிக்கு எதிரான உணர்வு, பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதை வேடிக்கை பார்த்த மத்தியில் ஆண்ட நரசிம்மராவ் ஆட்சி என காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசியதன் விளைவு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தேவகவுடா தலைமையிலான ஜனதாதளம் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸிற்கு அத்தேர்தலில் பலத்த அடி கிடைத்தது.
தேவகவுடாவுக்கு பதிலாக கர்நாடகாவின் முதல்வர் பதவியை ஏற்ற ஜெ.ஹெச்.பாட்டீலோ நல்ல முதல்வர் என்ற பெயரை எடுக்க தவறிவிட்டார். விளைவு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார்.
இதற்கிடையே உள்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் ஆட்சிகளுக்கிடையே பாஜக வேகமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. வலுவான சிறுபான்மை மக்களின் ஆதிக்கம் இல்லாத கர்நாடகாவில் சங்க்பரிவாரத்தின் மதவெறி அஜண்டாக்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத் துவங்கியது.
தென்னிந்தியாவில் காவியின் ஆட்சி என்ற சங்க்பரிவாரத்தின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவான களத்தை உருவாகும் சூழலை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் ஏற்படுத்திக் கொடுத்தன.
கிராம மக்களை மறந்துவிட்டு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலாளித்துவ சக்திகளின் விருப்பங்களுக்கு துணை நின்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.
கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாததுபோல் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உலக ஐ.டி வரைப்படத்தில் பெங்களூரின் இடத்தை உறுதிச் செய்வதிலேயே குறியாக இருந்தார்.
ஒரு ஆண்டிற்கு பிறகு குமாரசாமி முதல்வர் பதவியை இழக்க கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்க 4 சீட்டுகள் குறைவான நிலையில் ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.பின்னர் கர்நாடகத்தில் பா.ஜ.கவின் ஆட்சி ஊழலிலும், குதிரை வியாபாரத்திலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது.
ஹிந்துத்துவத்தின் உயிர்தெழலுக்காக கடுமையாக உழைக்கும் சங்க்பரிவாரின் உண்மையான விருப்பம்தான் கர்நாடகாவில் தற்பொழுது நடந்துவரும் பகல் கொள்ளையாகும். பெல்லாரியின் ராஜாக்களாக வலம்வரும் ரெட்டி சகோதரர்கள்தான் ஊழலின் சூத்திரதாரிகள்.
ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மெட்ரிக் டன் இரும்பை விற்று அதில் 25 ரூபாயை வரியாக செலுத்துகிறார்களாம். பெல்லாரியின் மலைகளையெல்லாம் ரெட்டி சகோதரர்கள் தரைமட்டமாக்கி வருகின்றனர். கிடைப்பதில் ஒரு பங்கு டெல்லியில் பா.ஜ.க தலைவர்களின் சட்டைப் பையில் முறைதவறாமல் விழுந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஆசிர்வதித்தவாறு கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.சி.ஜெயதேவும் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக உள்ளார்.
அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்சி ரிஸார்ட்டுகளுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குமிடையே சீரழிந்துக் கொண்டிருந்தது.
ஆட்சியில் தனது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துக்கொண்டு பிரமோத் முத்தலிக்கின் ஸ்ரீராம சேனா ஒரு கலவரத்திற்கு பத்துலட்சம், இரண்டு கலவரத்திற்கு பணம் கட்டினால் ஒரு கலவரம் இலவசம் என்ற மூலதன சந்தையின் ஆஃபருடன் செயல்படத் துவங்கியது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தியதைக் கூட எடியூரப்பாவின் பாஜக அரசால் பொறுத்துக் கொள்ளவியலவில்லை. இதற்காக அவர்கள் நிழலுக தாதாக்களுடன் கூட்டணி வைக்கக்கூட தயங்கவில்லை. நவ்ஷாத் ஹாஸிம்ஜி ஒரு அரசு-நிழலுக தாதாக்கள் கூட்டணியின் கொடூரத்திற்கு தனது இன்னுயிரை பறிக்கொடுத்தார்.
மைசூரில் ஹலீமா ஸாதிய்யா மஸ்ஜிதில் சங்க்பரிவாரக் கும்பல் பன்றியின் இறைச்சியை எறிந்து முஸ்லிம் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், இதனைப் புரிந்துக் கொண்ட முஸ்லிம் அமைப்புகள் ஒரு கலவரத்தை திட்டமிட்ட சங்க்பரிவார ஆட்சியாளர்களின் முயற்சிகளை எதிர்த்தனர்.
ஆனால், கலவரத்தை கொளுந்துவிட்டு எரியச் செய்யலாம் எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவின் முயற்சி தோல்வியடைந்ததால், அவரது கவனம் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் அடைப்பதை நோக்கி திரும்பியது.
பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கலவரத்தை தூண்ட முயன்றதாகக் கூறி கைதுச் செய்த ஆச்சார்யா, இதற்கெதிராக ஜனநாயகரீதியில் போராடிய பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையின் மூலம் வீதியில் போட்டு கண்மூடித்தனமாக அடித்து உதைக்கச் செய்தார். இறுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றமே தலையிட நேர்ந்தது.
தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும், மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் ஒரு தீவிரவாதியை உருவாக்கும் நிலைமைக்கு கர்நாடக பா.ஜ.க அரசு தள்ளப்பட்டது.
பலிகடாவை கண்டுபிடிக்கும் முயற்சி கடைசியாக கர்நாடகா எல்லையும் தாண்டி கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் சென்று முடிந்தது. ஊனமுற்றவராக ஒன்பது ஆண்டுகளை கோவைக் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு பின்பு விடுதலையான அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கேரள அரசின் உதவியுடன் கைதுச்செய்து சிறையிலடைத்தது கர்நாடகா பா.ஜ.க அரசு.
வழக்கத்திற்கு மாறாக அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிரான முயற்சிகளைக் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. மஃதனிக்கெதிரான சாட்சிகளும், வாக்குமூலங்களும் போலி என பல பக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கர்நாடகா மாநிலம் குடகு என்ற இடத்தில் நடந்த ரகசிய முகாமில் மஃதனி கலந்துக் கொண்டார் என்பதுதான் கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக முன்வைத்த முக்கிய சாட்சி .
கேரள போலீசாரின் கண்காணிப்பிலிருந்த அப்துல் நாஸர் மஃதனி அவர்களின் அனுமதியில்லாமல் எங்கும் செல்வதற்கான சுதந்திரத்தையும் இழந்திருந்தார். கேரள போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அப்துல் நாஸர் மஃதனி தனது ஒற்றைக் காலுடன் கர்நாடகா மாநிலம் குடகு ரகசிய முகாமில் பங்கேற்றார் என கர்நாடகா அரசு கூறியது.
பிரபலமானவர் என்ற நிலையில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அப்துல் நாஸர் மஃதனியின் உருவம் அடிக்கடி தென்படுவதால் அவரை குடகில் வைத்து அடையாளம் கண்டதாக கூறி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கர்நாடகா போலீஸ் தெரிவித்தது.
இதன் உண்மை நிலையை அறிவதற்காக ஏசியாநெட்டின் முன்னாள் செய்தியாளரான ஷாஹினா டெஹல்காவிற்காக கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறும் சாட்சிகளை சந்தித்துள்ளார். சாட்சிகளில் ஒருவர் பா.ஜ.கவைச் சார்ந்த யோகானாந்த் என்பவராவார். பா.ஜ.க அரசு அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சிகளாக முன்னிறுத்தியவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கூட தனக்கு தெரியாது என யோகானந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, குடகில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என யோகானந்த் கூறியுள்ளார்.
உண்மை விபரங்கள் வெளிவந்தால் தங்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும் என அஞ்சிய பா.ஜ.க அரசு ஷாஹினாவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டது.
சமீபத்தில் கேரளாவிலிருந்து தாய்லாந்திற்கு வர்த்தகம் தொடர்பாக பயணித்துவிட்டு திரும்பி வருகையில் பெங்களூர் வழியாக பயணித்த கேரளாவைச் சார்ந்த 9 நபர்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தனியாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டது பா.ஜ.க அரசு.
இவ்வாறு நாடு எக்கேடுக் கெட்டு குட்டிச்சுவாரானால் எங்களுக்கு என்ன? எங்கள் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற மனோநிலையிலிருக்கும் கர்நாடகாவின் சங்க்பரிவார அரசுக்கு இனி குஜராத் மாதிரி இனப்படுகொலைதான் மீதமுள்ளதோ?
விமர்சகன்
இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது ?
கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.
காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடியால் வெற்றி பெறமுடிகிறது
13.12.10
திருவாரூர் சமுதாய விழிப்புணர்வு மாநாடு – புகைப்படங்களுடன்!
கடந்த நவம்பர் 28ம் தேதி நடைபெற இருந்த திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு தொடர் மழையின் காரணமாக நேற்றைய தேதிக்கு (12-12-2010) தேதிக்கு. அதன் பின்னரும் நிலைமை முழுமையாக சீரடையாமல் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்ததுடன் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால் எதிர்பார்த்தது போல் மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது.
மேலும் திருவிடைச்சேரி கிராமத்தில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்று தெரிந்திருந்தும் தவ்ஹீத் ஜமா அத்தை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த 19 இயக்கங்கள் படாதபாடு பட்டன. ஊர் ஊராக ஆளுயர சுவரொட்டிகளை ஒட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் மீது கொலைப்பழியைச் சுமத்தி மாவட்டத்தில் உள்ள ஊர்கள் தோறும் சென்று தூண்டி விட்டார்கள்.
தமுமுகவும், பாலியல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்ட பாக்கர் கும்பலும், பல வேடம் போடும் விடியல் வெள்ளி கும்பலும் இதற்கு முன்னிலை வகித்தனர். திருவிடைச்சேரி சம்பவம் காரணமாக திருவாரூர் மாவட்ட மக்கள் மாநாட்டுக்கு வர மாட்டார்கள் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு மாநாடு தோல்வியடையும் என்று காத்துக் கிடந்தனர்.
மேலும் ஹஜ் பெருநாளை 18ம் தேதி கொண்டாடியதால் முஸ்லிம் சமுதாயம் தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறுப்பில் இருப்பதாகவும் கதை கட்டி மகிழ்ந்திருந்தனர்.
அவர்களது எண்ணத்திலும் எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போடும் விதமாக திருவிடைச்சேரி அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாநாடு நடந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்டது.
மற்ற இயக்கத்தினர் நடத்தும் மாநில மாநாடுகளை மிஞ்சும் வகையில் இந்த மாவட்ட மாநாடு மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரி சம அளவில் பங்கு கொண்டனர். மேடையில் இருந்து பார்க்கும் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்களின் தலைகளே காட்சியளித்தன. அல்ஹம்துலில்லாஹ்!
மாநாட்டின் கடைசியை மேடையில் இருந்து காண முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருவாரூர் இப்படியொரு மக்கள் வெள்ளத்தை இதற்கு முன் கண்டிருக்குமா என்பது சந்தேகமே. மாநாட்டு திடலின் நீளம் 600 மீட்டர் ஆகும். அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை மக்கள் நிரப்பிக் காட்டி நாட்டில் முஸ்லிம்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒரே அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தான் என்பதை அல்லாஹ் நிரூபித்துக் காட்டினான். அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் கடும் உழைப்பை இந்த மக்கள் கூட்டம் மெய்ப்பித்தது. மாவட்ட துணைத் தலைவர் வெங்கலம் அப்துல் காதர் தலைமையில் முதல் அமர்வு மாலை 5.00 மணிக்குத் தொடங்கியது. முதல் அமர்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பேச்சாளர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துடைய கொள்கை கோட் பாடுகள் குறித்து சிற்றுரைகள் ஆற்றினார்கள்.
இரண்டாம் அமர்வு மாலை 5.15 மணிக்கு மாவட்டத் தலைவர் அன்சாரி தலைமையில் தொடங்கியது. தலைமை உரைக்குப் பின் மாநிலப் பொருளாளர் முஹம்மது சாதிக் திருவாரூரில் தற்பொழுது காவல்துறை செய்துவரும் அட்டூழி யங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் சட்டத்திற்குட்பட்டு தமிழகமெங்கும் எவ்வாறு அமைதியாக நடைபெற்று வருகின்றது என்பதையும் விளக்கி அமைதி காக்கும் கூட்டத்தை வீணாக வம்புக்கிழுத்து விபரீத விளைவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கண்காணிப்பாளர் மூர்த்திக்கு எச்சரிக்கை செய்தார்.
சென்னை மாநகரிலும் மற்ற மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் செயல்பாடுகளை அறிந்து ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றார்கள் என்பதையும் திருவாரூர் மாவட்ட காவல் துறை மட்டும் தேவையில்லாமல் அநீதி இழைத்து வருகின்றது என்பதையும் விளக்கிக் கூறினார். அடுத்து மாநிலப் பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளுடன் போட்டி போட முடியாமலும் 19 ஜமாஅத்துகள் என்ற பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி எத்தனை அவதூறு சுவரொட்டிகள் ஒட்டி செயல்பட்டாலும் மக்கள் இவர்களது சுய ரூபத்தை அறிந்து தெளிவாக இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துக் காட்டிய கூட்டம்தான் இந்த மாநாட்டு வெள்ளம் என்று உதாரணங்களுடன் விளக்கினார்.
மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி ஜனவரி 27ம் நாள் நடைபெற இருக்கின்ற பேரணி மற்றும் போராட்டம் ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதுவரை வழங்கப் பட்ட தீர்ப்புகள் கடந்த 30-09-2010ம் நாள் பாபர் மசூதி வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை, அதில் கூறப்பட்ட மத நம்பிக்கையான சான்றுகள் நீதிபதிகளின் சட்ட விரோதமான சிந்தனை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் ராமர் பிறந்தார் என்ப தற்கு சான்றாக எடுத்துவைத்த அறிவியலாளர்களின் சான்றுகள் ஆகியவைகளை மிகத் தெளிவாக விளக்கினார்.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான இறையில்லத்தை பங்கு போட்ட அநீதிக்கு எதிராகவும் உரிமையை மறுத்து மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்தும் உச்ச நீதிமன்றமே தானாக இவ்வழக்கை எடுத்து விசாரித்து உரிய தீர்ப்பை வழங்குமாறு கோரியும் இன்ஷா அல்லாஹ் ஜனவரில் 27ம் நாள் பேரணியுடன் கூடிய போரட்டம் நடைபெற இருப்பதாக விளக்கினார். தமிழகத்தில் உயர் நீதிமன்றங்கள் உள்ள சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் இப்போரட்டத்திற்கு வருவீர்களா என மக்களை நோக்கிக் கேட்டபோது அல்லாஹ் அக்பர் என்ற கோஷத்துடன் தங்கள் கைகளை உயர்த்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நிறுவனரும் மேலாண்மைக் குழு உறுப்பினருமான பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் நிரைவுரையாற்றினார்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தீவிரவாதக் கருத்துகளை அடியோடு ஒழித்து மக்களை இறை நம்பிக்கையின்பால் அழைத்து வருவதை விளக்கினார். ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை செயலாற்றி வருவதை காரண காரியங்களுடன் விளக்கினார். இதற்கு முன் தோன்றிய இயக்கங்களின் சுயலாபக் கொள்கைகள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராகக் கூடியிருக்கும் இந்தக் கூட்டணிகளின் சுயரூபங்களை விளக்கி அவாகளின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார்.
தற்பொழுது திருவாரூர் மாவட்ட காவல்துறை திருவிடைச் சேரியில் ஒருதலைப்பட்சமாக நடந்து, தவறு செய்தவர்களை கைது செய்யாமல் சம்பந்தமில்லாத தவ்ஹீத் சகோதரர்களின் மேல் பொய் வழக்குப் போட்டு அநீதி இழைத்து வருவதை விளக்கினார். மேலும் தவ்ஹீத் சகோதரானின் வீட்டை அநியாயமாக உடைத்து நாசப்படுத்தியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி நிற்பதாகக் கூறினார். இதே போக்கு தொடருமேயானால் தவ்ஹீத் ஜமாஅத் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று எச்சரித்தார்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் காஜா முஹைதீன் தீர் மானங்கள் வாசித்து மக்களின் ஒப்புதலைப் பெற்றபின் கூட்டம் நிறைவு பெற்றது. பல மாதங்களுக்குப் பின் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் அரிய பல கருத்துகளைக் கேட்ட திருப்தியுடன் மக்கள் கலைந்துசென்றனர்

.
இந்தியத் தூதருக்கு அமெரிக்காவில் அவமதிப்பு!
வாஷிங்டன்: இந்தியப்பெண் தூதர் ஒருவர் அமெரிக்காவில் அவமானப் படுத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாரம்பரிய சேலை அணிந்து சென்ற அமெரிக்காவுக்கான இந்திய தூதரை மிசிசிப்பி விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர். இவர் மிசிசிபி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின்னர் பார்லிடிமோர் செல்வதற்காக, ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் மீராசங்கரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். தான் ஒரு தூதர் என்று மீராசங்கர் மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் எடுத்துக்கூறியும், சமாதானம் அடையாத அதிகாரிகள், சாதாரண பயணிகளை நடத்துவதைப்போல் சோதனையிட்டனர்.
விமானத்தில் செல்லும் சாதாரண பயணிகள் உடைகளுக்குள் ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து வைத்துள்ளனரா என கைகளால் தடவி பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும். இதேபோல், மீராசங்கரை வி.ஐ.பி. வெயிடிங் அறைக்கு அழைத்துச் சென்று பெண் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஜாக்சன் ரோவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் முழு உடம்பையும் ஸ்கேன் செய்யும் மிஷின்கள் இல்லாததால், மீரா இந்த மாதிரியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியத்தூதர் சேலை அணிந்திருந்ததால் சோதனை நடத்தப்பட்டதாக மீராசங்கர் உடனிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
எனது கணவரின் தியாகத்தை அவமதிக்காதீர்கள்-காங்.குக்கு கர்கரே மனைவி கடும் கண்டனம்

மும்பை தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு என்னிடம் கர்கரே பேசினார். அப்போது தனக்கும், தனது குடும்பத்திற்கும் இந்து அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார் என்று நேற்று பரபரப்புதகவலை வெளியிட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலும் கூட திக்விஜய் சிங்கின் பேச்சுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திக்விஜய் சிங்கின் கூற்றை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். எனது கணவர் உள்பட மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரையும் கொன்றது பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன், ஏற்கிறேன். திக்விஜய் சிங், இந்த பிரச்சினையை அரசியலாக்க முயலுகிறார். தேவையில்லாமல் இந்துக்களை இந்த பிரச்சினையில் இழுத்து விட்டு அரசியல் லாபம் காண முயலுகிறார். இது வேதனை அளிக்கிறது.
திக்விஜய் சிங் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் விரோதத்தை ஏற்படுத்த முயலுகிறார். அதில் குளிர்காய நினைக்கிறார். இது நிச்சயம் நமது நாட்டுக்கு நல்லதல்ல, பாகிஸ்தானுக்குதான் திக்விஜய்சிங்கின் பேச்சு முழுப் பலனையும் கொடுக்கும்.
தற்போது அவரது தியாகத்தையும், மரணத்தையும் அவமதிப்பது போல திக்விஜய் சிங் பேசியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் மோசமாக உணர்கிறேன். எனது குழந்தைகள் இப்போது வெளிநாடுகளில் உள்ளனர். சமயங்களில் இங்கு நடப்பதைப் பார்க்கும்போது பேசாமல் அவர்களுடன் போய் செட்டிலாகி விடலாமா என்று கூட எனக்கு விரக்தி ஏற்படுகிறது என்றார் கவிதா.
தமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை.
இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.
கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும் வேலை செய்தவர்கள் எல்லாரையும் அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின் காங்கிரஸ் முன்னாள் MP யையும் அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர்.
ஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா? இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா? இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா? இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன்? இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.
இதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது.
தொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19 முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள் மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்
மாலேகான் குண்டு வெடிப்பு: 'உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே'-திக்விஜய் சிங்!

டெல்லி: மாலேகான் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்கரே இவ்வாறு கூறியதாக திக்விஜய் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த கர்கரே மாலேகாவ்ன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து அதில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.
இந்த வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களை கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியது. ஆனால், வழக்கு மிக முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது மறைவுக்குப் பின் இந்த வழக்கில் தொய்வு ஏற்படத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக திக்விஜய் சிங் இப்போது தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவு 7 மணிக்கு கர்கரே என்னை எனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு கவலையுடன் பேசினார். அப்போது பேசிய கர்கரே, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. நானும் என் குடும்பத்தினரும் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் உள்ளோம். மலேகாவ்ன் வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்க்கும் தரப்பினரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது என்றார்.
மேலும் இந்த வழக்கில் அவரது விசாரணை குறித்தும் நேர்மை குறித்தும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியதால் கர்கரே மிகவும மணம் புண்பட்டுப் போயிருந்தார். இதை அவரது குரலை வைத்தே என்னால் உணர முடிந்தது.
அவ்வாறு பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மும்பை தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.
இவ்வாறு திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற தகவல் வந்தவுடன் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்கரே, அப்படியே அதை விட்டுவிட்டு ஸ்பாட்டுக்கு ஓடினார். காமா மருத்துவமனைப் பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ளே புகுந்த அவரது நெஞ்சில் தீவிரவாதிகளின் குண்டுகள் பாயந்தன. அதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல்களை திசை திருப்ப காங். முயற்சி-பாஜக கண்டனம்:
திக்விஜய் சி்ங்கின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு துரதிஷ்டவசமானது என்று பாஜக கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அதை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் திக்விஜய் சிங்கின் இந்தப் பேச்சு என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
அந்துலேவைத் தொடர்ந்து திக்விஜய்:
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை என்றும், இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்படுவதாக நான் உணர்கிறேன் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் எழுப்பியதும், அதற்க பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.
அந்துலேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவி விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது
குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப் புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ் காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் குரலெழுப்பியுள்ளார்.குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்" என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர் அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை என்னவென்பது?
சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப் படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக் கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார். "முஸ்லிம்கள் கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.
அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கட்டளைகளின்படி செயல்பட மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீகுமாருக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் டிஜிபி ஆகப் பதவி உயர்வு பெற்றதே தனிக்கதை.கோத்ரா கலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்த நாநாவதி கமிஷன்முன் ஆஜராகி, குஜராத் அரசுக்கு எதிராகப் பல தகவல்களை ஆகஸ்ட் 2004இல் ஸ்ரீகுமார் அளித்தார். அதனால், 2005இல் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு கொடுக்கவில்லை.
அதை எதிர்த்து மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டு விசாரணைக்குப் பின்னர், கடந்த 2008 மே மாதம் 2ஆம் தேதியன்று - அதாவது ஸ்ரீகுமார் ஓய்வு பெற்ற பின்னர் - டிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டார்.
ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது ஸ்ரீகுமார் கூறினார்.
குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வுத்துறையினர் (IB) விசாரித்தால் இன்ன இன்ன மாதிரிதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீகுமாரின் உயரதிகாரி பீ.ஸீ. பாண்டே வற்புறுத்தியுள்ளார். அதை ஸ்ரீகுமார் பதிவு செய்து வைத்துள்ளார். தன்னை அடிபணிய வைப்பதற்காகவே தனக்கு வரவேண்டிய பதவி உயர்வுக்கு, தன் ஜூனியரான அஹமதாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர் கௌசிக்கை குஜராத் அரசு தேர்வு செய்து நியமித்தது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
குஜராத் காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.
குஜராத்தில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து, வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீகுமார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும் ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக் கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.
"இங்கு இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப் படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக உள்ளது என்பதாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.
மேலும், "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர் எச்சரித்தார்.
மதக் கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார் மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.
ஸ்ரீகுமார் தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில் பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை. மோடி உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.
தான் வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87 பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம் என்றும் ஸ்ரீகுமார் கூறினார் "திருமதி ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப் பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே முயன்று வருகின்றனர்" என்றும் "உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
குஜராத் கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால் போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார். தான் பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.
சரித்திரத்தில் முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும் படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள் ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.
"மிகவும் கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் தீவிரவாத குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.
உண்மையைப் புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில், இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப் படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும் இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி முடித்தார் ஸ்ரீகுமார்
தினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவத்தின் அடிவருடிகள்.
தினமலர், தினமணி போன்ற பார்பன பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா ஆதரவு செய்திகளை போட்டு வழக்கம்போல் இந்தியாவில் யாருக்கும் கொசுகடித்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்றும் செய்தி போட்டு அரிப்பை சொரிந்து கொள்கிறார்கள். தங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் அம்பலமான போது அதை மறைத்தும் திசை திருப்பியும் செய்தி போட்டார்கள்.தமிழகம் ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் பெண்கள் அமைப்பான துர்காவாகினியை சேர்ந்த பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதை பற்றி ஒரு செய்தியும் போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள்.
தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த விக்கிலீக்ஸ் பற்றிய எந்த செய்தியும் போடாமல் செய்தி “ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.
தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் இந்த பார்பன ஹிந்துத்துவா பத்திரிக்கைகளின் தரமும், தர்மமும் போலும்.முதலாளித்துவ நாடுகள் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். இந்த பார்பன வந்தேறிகள் சுதந்திரத்துக்கு முன்னாள் இந்திய சுதந்திர வீரர்களை வெள்ளை பிரிட்டிஷ்காரர்களுக்கு காட்டி கொடுத்து உயர் பதவிகள் வகித்தார்கள் இப்ப முதலாளித்தவ விசுவாசிகளாகி மேற்கத்திய நாடுகளுக்கு குடை பிடிகிறார்கள். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது. இப்பொழுது ஒரே ஆறுதலும், ஆதரவும் இணையதளங்கள் தான் கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.
நன்றி: தீராத பக்கங்கள்
10.12.10
அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிரான கண்டனம் சரியே: உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றத்தின் இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதமன்றத்தின் சார்பில் விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் வாதாடினார். அலாகாபத் உயர் நீதிமன்றத்தில் உள்ள பல நல்ல நீதிபதிகளும் தற்போது சந்தேக வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் நீதிபதிகளின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு கோபமுடன் பதில் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி மர்கண்டேய கட்ஜு, அனைத்து விஷயங்களையும் கூறிக் கொண்டிருக்காதீர்கள். நானும் எனது குடும்பத்தினரும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்துடன் தொடர்பில் இருந்து வந்தவர்கள்தான். எந்த நீதிபதி கறைபடிந்துள்ளார். எவர் நேர்மையானவர் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே இவை பற்றியெல்லாம் என்னிடம் கூறாதீர்கள் என்று கூறினார்.
நாளை மர்கண்டேய கட்ஜு லஞ்சம் வாங்கினால், நாடு முழுவதும் நான் லஞ்சம் வாங்கியது வெளியில் தெரிந்துவிடும். எனவே எவர் நேர்மையானவர்; எவர் கறை படிந்துள்ளவர் என்பது போன்று என்னிடம் கூற வேண்டாம் என்றும் கட்ஜு கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய கருத்து முழு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நடத்தையையே கேள்விக்குட்படுத்தி இருப்பதால், கிராமப்புற மக்களுக்கு நேர்மையான நீதிபதி யார், கறைபடிந்த நீதிபதி யார் என்ற வேறுபாடு தெரியாது. எனவே இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ராவ் கேட்டிருந்தார்.
கிராமப்புற மக்கள் குறித்தெல்லாம் என்னிடம் கூறிக் கொண்டிருக்காதீர்கள். அவர்கள் இப்போது மிகவும் தெளிவாக உள்ளனர். இந்திய மக்கள் முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம் என்று கட்ஜு பதில் அளித்தார்.
கடந்த நவம்பர் 27ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் பரைச் என்ற ஊரில் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சர்கஸ் காட்சி நடத்துவதற்கு ஒதுக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தனர்.
"டென்மார்க நாட்டில் ஏதோ அரசியல் கறைபடிந்துள்ளது" என்று ஷேக்ஸ்பியர் தம்முடைய நாவலான ஹேம்லெட்டில் கூறியுள்ளார். அதுபோல, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறை படிந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் கூறியிருந்தது. "அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
வளைகுடாவின் செல்வாக்கான 100 இந்திய அதிகார சக்திகளின் விபரங்கள்
இப்பட்டியலில் முதலிடத்தில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்கே குழும உரிமையாளர் யூசுப் அலி உள்ளார். இவரின் குழுமத்தின் ஒரு அங்கமான லூலூ ஹைபர் மார்கெட் வளைகுடாவின் எல்லா நாடுகளிலும் பரவி வியாபித்துள்ள ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரின் குழமத்தில் 29 நாடுகளை சார்ந்த 22,000 மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில் குழுமங்களிலேயே தமிழ் நாட்டை சார்ந்த சையது சலாஹூதினால் நிர்வகிக்கப்படும் ஈ.டி.ஏ குழுமத்தில் மாத்திரம் இதை விட அதிகமான நபர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்பார் கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் துணை தலைவர் முஹம்மது அலி, பெட்ரோ கெம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யோகேஷ் மேத்தா, யூனிலிவர் தலைமை நிர்வாகி சஞ்சீவ் மேத்தா, துபாய் பேர்ல் கன்ஷ்டரக்ஷன் தலைவர் சந்தோஷ் ஜோசப் ஆகியோர் முறையே ஐந்து முதல் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். முதல் பத்தில் உள்ள ஓரே பெண்மணியாக ஜூலைகா மருத்துவமனையின் நிறுவனர் ஜூலைகா தாவூத் உள்ளார்.
இப்பட்டியலில் உள்ள நபர்களில் மூன்றில் ஒருவர் சில்லறை வணிகத்தில் உள்ளனர். மேலும் கன்ஷ்டரக்ஷன், சுகாதாரம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் கோலோசுப்பவர்களும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பட்டியலில் தமிழக்த்திலிருந்து ஈ.டி.ஏ குழும தலைமை நிர்வாகி சலாஹீதின் 20வது இடத்திலும் ஈ.டி.ஏ குழும நிறுவனர் அப்துல் ரஹ்மானின் மகனும் கோல் & ஆயில் இந்தியா குழும உரிமையாளர் அஹ்மது புகாரி 44வது இடத்திலும் உள்ளனர்.
தமிழகத்தை சார்ந்த நபர்களில் அல் நபூதா மோட்டார்ஸின் தலைமை நிர்வாகி ராஜாராம் 25வது இடத்திலும் லார்ஸன் அன்ட் டுபூரோ பகுதி மேலாளர் நாகநாதன் 47வது இடத்திலும் தோஹா வங்கியின் தலைமை நிர்வாகி சீத்தாராமன் 59வது இடத்திலும் கல்ப் இன்கானின் தலைமை மேலாளர் கனேஷ் சீனிவாசன் 89வது இடத்திலும் உள்ளனர். கல்வி நிறுவங்களில் ஜெம்ஸ் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் வர்கீஸ் 11வது இடத்திலும் இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலை நடத்தி வரும் ரபியுத்தீன் 53வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்வீடன் அரசின் இணையதளத்தை ஹாக் செய்த விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள்: 12 மணி நேரத்திறகும் மேலாக செயலிழப்பு
ஸ்டாக்ஹோம்: உலகையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ஹாக்கர்ஸ் குழு ஸ்வீடன் அரசின் இணையதளத்தை ஹாக் செய்து முடக்கி ஸ்வீடன் அரசை அதிர வைத்துள்ளது.விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள் சுவீடன் அரசின் இணையதளத்தை( http://www.regeringen.se/ ) 12 மணி நேரத்திற்கும் மேலாக செயல் இழக்கச் செய்தனர்.
இன்று அரசு தங்கள் இணையதளத்தை பயன்படுத்த முயன்றபோது அவர்களால் அதற்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் சர்வரை அணுக முடியவில்லை என்றே வந்துள்ளது என்று ஸ்வீடன் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்குமுன் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் விசா இணையதளத்தை ஹாக் செய்தனர். மேலும், அலாஸ்காவின் முன்னாள் ஆளுநர் சாரா பாலின் இணையதளத்தையும் ஹாக் செய்தனர். சாரா அஸ்ஸான்ஜை இரத்தக்கறை படிந்த கைகளுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுபவர் என்று விமர்சித்திருந்தார்
8.12.10
வாரணாசியில் குண்டு வெடித்து 20 பேர் காயம்!
வாரணாசியில் கங்கா ஆர்த்தி என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 4 பேர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் குறைந்தது 20 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றிருக்கக் கூடும் என்றும் அவர்களில் வெளிநாட்டவரும் அடக்கம் என்றும் இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
கங்கை நதிக்கரையோரம் தஷாஸ்வமேத் பகுதியில் மாலை 6.30 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றதாக அரசுத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வாரணாசி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குண்டு வெடிப்புத் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலஸ்தீன் நாட்டை பிரேசில் அங்கீகரித்து உள்ளது.

சாமியார் நித்தியானந்தா அறையில் ஆணுறைகள்: பெண் பரபரப்பு வாக்குமூலம்
சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்கு மூலத்தையும் இணைத்துள்ளனர்.
பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.
இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இருப்பினும் நித்தியானந்தாவின் போதனைகளால் எனது மனம் அந்த அதிர்ச்சியை புறக்கணித்தது. எந்த ஒரு குடும்பப் பெண்ணும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்க மாட்டார். ஆனால் நித்தியானந்தாவின் போதனையால் பிரெய்ன் வாஷ் செய்யப்பட்டிருந்த நான் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்தேன்.
பின்னர் அதை தனது அறைக்குக் கொண்டு வருமாறு கூறினார் நித்தியானந்தா. அங்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அதை வாங்கி அருந்தினார். என்னால் அந்த மதுவின் நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் வாந்தி எடுத்து விட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன்.
சில மணிநேரம் கழித்து நித்தியானந்தா எழுப்பிய பிறகே நான் கண் விழித்தேன். நான் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன். என்னை அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனது உடைகள் கலைந்திருந்தன.
பிறகு என்னை டிரஸ் செய்து கொள்ளச் சொல்லி அங்கிருந்து போகுமாறு பணித்தார் நித்தியானந்தா. நான் ஆசிரமத்தில் சேர்ந்தபோது நித்தியானந்தா போட்ட விதிமுறைகளில் ஒன்றாக எனக்குக் கூறப்பட்டவை ஆசிரமத்திற்குள் மது அருந்தக் கூடாது என்பது. ஆனால் என்னையே மது வாங்கச் சொல்லி அனுப்பி வைத்தவர் நித்தியானந்தா.
அதேசமயம், நான் அவருக்கு மது வாங்கி வந்ததையும், அவர் அருந்தியதையும் யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை எச்சரித்தார் நித்தியானந்தா என்று அந்த பெண் கூறியுள்ளார். மது மட்டுமல்லாமல் ஆணுறைகளும் நித்தியானந்தா அறையில் இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இவை இரண்டும் நித்தியானந்தா அறையில் எப்போதும் இருக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளதாக அந்த வாக்குமூலம் தெரிவிக்கிறது
மன்மதன் அம்பு: கமலின் வக்கிரம்.
கமலகாசன் சிறந்த வியாபாரி.இவர் கவுதமியை கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது. இவர் இதற்க்கு முன்னாள் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தி நிறைய படங்கள் எடுத்துள்ளார். அப்போது எல்லாம் இந்த பார்பன பத்திரிக்கைகள் அதை பெரிய விசயமாக எடுத்து கொண்டது இல்லை. இது ஒருபுறம் இருக்க இவர் ஹிந்து மத மக்களின் உணர்வுகளை காயபடுத்தி மன்மதன் அம்பு படத்தில் சில பாடல்கள் எழுதி இருக்கிறார் என்ற கண்டனம் எழுந்துள்ளது. இவர் இதன் மூலம் அந்த படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் என்றே சொல்ல முடிகிறது. இந்த விஷயம் முற்றிலும் கண்டிக்கபட வேண்டியது. இந்த தருணத்தில் மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்த மன்மதன் அன்பு படத்தை பார்ப்பதை தவிர்ப்பது தான் இதற்க்கு நீங்கள் செலுத்தும் சிறந்த எதிர்ப்பாகும். இன்னும் எத்தனை ஏழை எளிய மக்கள் கமல் ரசிகர் மன்றம் அமைத்து கமல் பட கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் செய்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து இந்த படத்திற்கு கொடுக்கும் தோல்விதான் இவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்று கொடுக்கும்




