தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.9.10

ஐ.நா. தலையிடும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்!

அமைதியின்றி வளர்ச்சியில்லை என்பது அடிக்கடி அமைச்சர்களும் அதிகாரிகளும் பேசுகிற குத்து வசனங்கள் (பஞ்ச் டயலாக்). இவர்கள் எதை அமைதி என்கிறார்கள் ? எதை வளர்ச்சி என்கிறார்கள். முதலில் தெளிய வேண்டிய பித்து இதுதான்.


காஷ்மீரில் கடந்த ஜுன் 11 அன்று தெருவில் இறங்கி போராடிய கூட்டத்தைக் குறிவைத்து கண்ணீர்புகைத் தோட்டாவை சுட்டதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். வானைநோக்கி சுடுவதுதான்வழக்கம். 

இந்தப் படுகொலையைக் கண்டித்து போராடியவர்கள் மீது மேலும் மேலும் துப்பாக்கிச்சூடு. 25 வயது பெண், சிறுவர்கள் உட்பட கடந்த 7 வாரங்களில் 30 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் காஷ்மீர் தேசத்து மக்களெல்லாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதல்வர் உமர்அப்துல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லிக்கு வந்து ஷாப்பிங் செய்யாமல் இருக்கமாட்டார். தலைநகரில் பணப்புழக்கம் குறைந்துவிடுமோ என்ற கவலையாக இருக்கலாம்.

அவர், முதலில் வன்முறையின் சுழற்சியை தடுத்து அமைதியை உருவாக்க வேண்டும். பிறகு அரசியல் பிரச்சனைகளைப் பார்க்கலாம்” என்கிறார். இங்கே அமைதியின் எதிரியாக பொதுமக்களைக் காட்டுகிறார். அது தொலைக்காட்சி வழியாக நாடெங்கும் செல்கிறது. பயங்கரவாதிகள் போராட்டக்காரர்களோடு ஊடுருவியிருக்கிறார்கள். 

பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு என்றெல்லாம் (தமிழகத்தில் 2 மாதத்தில் திடீரென்று 10 ரயில்கவிழ்ப்பு சதிகளுக்கு மேல் காட்டப்பட்டது போல்) தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டே இருக்கின்றன. நாமும் அப்படியே நம்பினோம். கலவரக்கார்களை கண்டதும் (மேலும்) சுட உத்தரவு போடப்பட்டது. அமைதிக்காத்தோம். இது தான் அமைதி!.

காஷ்மீரில் கடந்த 19 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஐந்து காஷ்மீரிகளுக்கு எதிராக ஒரு இந்திய சிப்பாய் துப்பாக்கி துணை நீட்டிக் கொண்டு நிற்கிறது. தினமும் சுடுவதற்கு ஒரு கலகக்காரனோ ஒரு தீவிரவாதியோ கிடைத்து விடுகிறான். இந்த கணக்குகள் இதுவரை போராட்டத்தில் கல்லெறிந்தார்கள் என்று சொல்லி 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டு விசாரணையில்லாமல் சிறைதண்டனையளிக்கும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் வீதிகளெங்கும் மக்கள் கூட்டம். வீதிகளெங்கும் இளைஞர்களின் ஆட்சி. அவர்களின் முழக்கக்குரல் விண்ணைப் பிளக்கிறது. இந்திய அரசே காஷ்மீரை விட்டு வெளியேறு! .

காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தம் என்று வசனம் பேசும் தமிழ்படங்களும் இந்திப்படங்களும் நிறைய காசுப்பார்த்து விட்டன. ஆனால் நமது முதல்பிரதமர் நேரு அப்படிச் சொல்லவில்லை.

ஒரு நெடுங்கதை சீக்கிய மன்னன் ஹரிசிங்கிடம் விசுவாசம் காட்டி ஜம்மு பகுதியைப் பரிசாகப் பெற்றான் குலாப்சிங். டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இவன் ஆங்கிலேயருக்கும் சீக்கியருக்கும் இடையில் மூண்ட போரில் ஆங்கிலேயேருக்கு உதவினான். 

அதாவது அன்றைய கருணா பலனாக ஆங்கிலேயர் காஷ்மீரை அவனிடம் கையளித்தார்கள். இந்து மன்னனான இவன் 87 சதவீதம் முஸ்லீம் மக்களின் ஆட்சியாளராக முடிசூடிக் கொண்டான். அதாவது காஷ்மீர் மக்களால் எவ்விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தான் தோன்றித் தனமான மன்னராட்சி. இதன் வாரிசுதான் மன்னன் ஹரிசிங்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளோடும் இணைவதில்லை என்ற நிலை எடுத்தான் மன்னன் ஹரிசிங். மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து பூஞ்ச் (ஜம்மு) பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம்கான் தலைமையில் ஆயுத எழுச்சி நடத்தப்பட்டது. இவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான். 

இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து சுமார் 3000 பழங்குடியினர் படையெடுத்து வந்தனர். அவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.. மன்னர் இந்திய அரசிடம் ஓடினான். இந்தியராணுவம் அவர்களை விரட்டியடித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் மூண்டது. 1949 ஜன 1-ல் போர் முடிவுற்றது. இரு ஒப்பந்தங்களுக்கு அந்தப்போர் வழிவகுத்தது.

மன்னன் ஹரிசிங் - பாகிஸ்தான் இடையே 1948 டிச -31ல் அசையாநிலை ஒப்பந்தமும், மன்னனுக்கும் இந்தியாவுக்கும் இணைப்புக்கான ஒப்பந்தமும் போடப்பட்டன.

பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (ஆஸாதி காஷ்மீர் எனப்படுவது) என்றது. ஜம்மு – காஷ்மீர் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தான் சொன்னது. இருவர் சொன்னதும் உண்மைதான்.

இந்தியாவுக்கும் மன்னனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சொல்வதென்ன?

1. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு சம்மந்தமான அதிகாரங்கள் மட்டுமே இந்தியாவுக்குரியது மற்ற அதிகாரங்கள் காஷ்மீருக்கு உரியது.

இதன்படி அரசியல் சட்டம் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு சுயாட்சி உரிமைகள் கொண்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமைக்கப்பட்டது.

2. ஜம்மு – காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்தியாவோடு சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்துவது. இதனை ஐ.நா. அவை மேற்பார்வை செய்யும் காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசுடன் இணைக்கப்படும்.

இந்த இரு கூறுகளையும் நமது முதல் பிரதமர் நேரு வானொலியில் அறிவித்தார். இதை ஐ.நா. அவைக்கும் எடுத்துச் சென்றார். ஐ.நா. அவை இதை ஏற்று இந்தியா பாகிஸ்தான் ஐ.நா. ஆணையம் ஒன்றை அமைத்தது.

இந்நிலையில் காஷ்மீர் தேசிய இன உரிமையை முன்னிறுத்திப் போராடிய அப்துல்லா 1948, மார்ச் 17 பிரதமராக பதவியேற்கிறார். காஷ்மீருக்கு தனிப் பாராளுமன்றம் அமைக்கப்படுகிறது. இளவரசர் கரண்சிங் காஷ்மீரின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசோடு நட்பான ஒரு சுயாட்சிக் குடியரசின் ஆட்சி மலர்ந்தது.

பிரதமர் பரூக் அப்துல்லா டோக்ரா அரசர்களின் பரம்பரை ஆட்சி உரிமையை ரத்து செய்தார். ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, ஜாகிர்தாரி முறை ஒழிப்பு, நிலச்சீர்திருத்தம் ஆகிய முற்போக்கான சீர்திருத்தங்களைச் செய்தார். மிகக் குறுகிய காலமே இது நீடித்தது.

இனி இந்திய அரசின் துரோகப் பட்டியல் :-

1. இன்றுவரை பொதுசனவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

2. 1949, அக்-17ல் உருவான அசியல் சாசனப்பிரிவு 370ன் கீழான உரிமைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டன.

3. ஆக, 8 1953ல் பிரதமர் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்மீது காஷ்மீர் சதி வழக்கு போடப்பட்டது.

4. அக் 30 1956ல் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த பகுதி என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

5. காஷ்மீர் அரசிடம் அதுவரை இருந்த மாநில உள் விவகாரங்கள் அனைத்திலும் சட்டமியற்றும் அதிகாரத்தை இந்திய அரசு எடுத்துக்கொண்டது.

பின் 1961ல் இந்தியா – பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினை வெறும் எல்லைத் தகரான சிக்கலாகக் குறுக்கப்பட்டது. 1987க்கு பிறகு வெடித்த ஆயுதந்தாங்கிய காஷ்மீர் விடுதலைப் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. தீவிரவாதம், பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு தேசிய இனப் பிரச்சனை முற்றாக திசை திருப்பப்பட்டது நமது பிரதமர் நேரு வானொலியில் ஆற்றிய உறுதியளிக்கும் உரைகளை வான்வெளியில் பறக்கவிட்டார். அவரது வாரிசுகளின் காலத்தில் கொல்லப்பட்ட லட்சம் காஷ்மீரிகளின் குழந்தைகள் தீவிரவாதிகளின் குழந்தைகள் என்பதால் அவர்களுள் 15000 குழந்தைகளுக்கு அரசு உதவிகள் கிடையாதாம்.

இப்போது நடைபெறும் போராட்டத்தில் மேலும் குழந்தைகள் அநாதைகளாகலாம். அவர்களுக்கும் அநாதை வாரிசுகள் பிறக்கலாம். அவர்களின் வாரிசுகள் எதிர்காலத்தில் தேசிய இன உரிமைகளின் மாபெரும் எதிரி இந்தியாவே எங்களின் தாய்மண்ணை விட்டு வெளியேறு என்று நாளை வீதியிலிறங்கி விண்ணதிரக் கத்தலாம். எவ்வளவு உரக்கக் கத்தினாலும் அதைத் தனிமைப்படுத்தும் சாதுரியம் இந்திய அரசுக்கு உண்டு.

காஷ்மீரிகளின் குரலை தமிழர்களும், தமிழர்களின் குரலை காஷ்மீரிகளும் எதிரொளிக்கும் ஒரு நன்னாளில் அமைதி ஏற்படும். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம்.

காஷ்மீரில் அமைதி இழந்து கலவரம் வெடிக்க காரணம் என்ன?
இயற்கையாகவே சுற்றுலா தளங்கள் நிறைந்த, குளுமையான பிரதேசம் காஷ்மீர். அதனால் தான் ஜவஹர்லால் நேரு முதல் ஆங்கிலேயர்கள் வரை இங்கு வந்து தங்கி ஓய்வு எடுத்தனர். இன்றைய அரசியல்வாதிகளும் ஓய்வுக்காக செல்லும் முக்கியமான இடம் இதுதான். அதே போல இங்குள்ள பெண்களும் இயற்கை அழகு கொண்டார்கள். காண்பவர்களை கவரும் அழகு இவர்களிடம் உள்ளது இந்த அழகை பார்க்க, ரசிக்க வந்தவர்கள் ருசிக்கவும் செய்து விட்டனர்.

பாதுகாப்புக்கு என்று வந்தவர்களும் பெண்களை சூரையாடிவிட்டனர். கோடை சுற்றுலா தளம் என்பதால் பெண்கள் கம்பளி போன்ற பொருட்களை விற்க வரும் போது தங்களின் கற்பையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பாதுகாப்பு படைகள் சூரையாடியதை கேட்க செல்லும் இளைஞர்களை பாதுகாப்பு வீரர்கள் தாக்கி விசாரணை என்ற பெயரில் தூக்கிச் செல்வதுடன் சரி மீண்டும் அந்த இளைஞன் திரும்பி வரமாட்டான். இதுக்கு நியாயம் கேட்க போராடினால் நாங்கள் கலவரக்காரர்கள் ஆகிவிடுகிறோம். இப்படி பாதிக்கப்படாத குடும்பங்களே காச்ஷ்மீரில் இல்லை.

இதை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சாதகமாக்கிக் கொண்டு வேதனையில் இருப்பவர்களிடம் சாதகமாக பேசி கலவரம் தூண்டி அதில் அவர்கள் காய்வதுடன் ஊடுருவி இந்தியாவுக்குள்ளும் நுழைகிறார்கள். எப்படி ஆனாலும் பாதிப்பு காஷ்மீர் மக்களுக்குத்தான்.

எங்களின் இந்த துயர நிலைக்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான் இவர்களுடன் ஐ.நா.சபையும் தான். தொடக்க கால ஒப்பந்தப்படி பொது ஜன வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் நாங்களும் சுதந்திரமாக இருந்திருப்போம். இலங்கையில் நடந்த இன அழிப்பின் மோகமும் சரி எங்கள் இன அழிப்பின் மோகமும் சரி ஐநா மௌனம் காக்கும்வரை உயிர்பலிகள் நடந்தும், உயிர்களை காக்க ஐ.நா.தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா.வின் தலையீடு வரும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை தான் உயரும்.
- தங்க பாண்டியன்
- இரா. பகத்சிங்

4.9.10

 அ. மார்க்ஸ்'
காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் - அ. மார்க்ஸ்'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் சென்றன.

2008 ஜனவரி 25-ம் தேதி, அன்று காலை வழக்கம்போல நாளிதழ்களை விரித்தபோது, ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் இரவு 9 மணி அளவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்திதான் அது! புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவிலும் வெடிகுண்டு வெடித்திருந்தது. உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும் வகுப்பு முரண் உள்ள ஓர் ஊரில் இப்படியான ஒரு சம்பவம் கவலையை அளித்தது. முந்தைய ஆண்டில் அங்கே இப்படியான மோதலில் ஆறு கொலைகள் நடந்திருந்தன. வெடிகுண்டு சம்பவத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, தென்காசி சென்றிருந்த உண்மை அறியும் குழு ஒன்றில் பங்குபெற்றிருந்ததால், அங்கு உள்ள சூழலை நான் அறிவேன்.

எல்லோரையும்போல் எனக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மேல்தான் சந்தேகம் வந்தது. அவர்களுக்குப் பிரச்னை இருந்தது உண்மைதான்... ஆனால், 'அதற்காக இப்படிச் செய்யலாமா?' என நினைத்தேன். ஊடகங்களும், முஸ்லிம் பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி எழுதித் தள்ளின. ஆனாலும் எனக்குள் ஒரு சந்தேகம். அங்கு உள்ள முஸ்லிம்கள் ரொம்பவும் பயந்துபோய்த் தற்காப்பு நிலையில்தான் இருந்தார்கள். அவர்களா இப்படிச் செய்திருப்பார்கள்?

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், எனக்கு பதில் கிடைத்தது. தென் மண்டலக் காவல் துறை ஐ.ஜி-யான சஞ்சீவ் குமார் மற்றும் டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வெடிகுண்டு வைத்தது இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள்தான் என்பதை வெளிப்படுத்தினர். அது மட்டும் அல்ல, இரு சமூகங்களுக்குள் மோதலை உருவாக்கும் நோக்குடன், முஸ்லிம்கள் மீது பழி போடும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டது என்பதையும் விளக்கினர். அதில் 14 பைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக பாபநாசம் காடுகளில் வெடித்துச் சோதனையும் செய்திருந்தனர். ரவி பாண்டியன், குமார், நாராயண தர்மா உள்ளிட்ட காவிக் கொடி ஏந்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதத்தைச் செய்து முடித்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள். அப்போது கொல்லப்பட்டது தேசத் தந்தை என மக்களால் வணங்கப்பட்ட காந்தியடிகள். அவர் செய்த குற்றம், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்குவதற்குத் தடையாக இருந்ததும், காவியும் திரிசூலமும் நம்முடைய அடையாளங்களாக வைக்க விடாமல் , அசோகச் சக்கரத்தை அதில் இடம் பெறக்கூடிய சூழலை உருவாக்கியதும் தான்.

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, முதல் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாவர்க்கர் ஆகிய இருவரின் பரம்பரையிலும் வந்த ஹிமானி சாவர்கரின் 'அபினவ பாரதம்' என்கிற அமைப்பு தொடர்புடைய தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஒன்று, கடந்த செப்டம்பர் 2008-ல் அம்பலப்பட்டபோதுதான் 'காவி பயங்கரவாதம்' என்கிற சொல்லைப் பலரும் உச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலேகான் என்னும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகர் ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சாத்வி பிரக்ஞா தாகூர், தயானந்த தேஷ்பாண்டே என்ற இரு காவி உடைதாரிகள், ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா என்ற இரு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாத்வி பிரக்ஞா, ஏ.பி.வி.பி., விசுவ ஹிந்து பரிஷத் முதலிய அமைப்புகளில் இருந்தவர். ராணுவ அதிகாரிகள், ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் கொண்டுவந்தவர்கள். இவர்கள் எல்லோரும் நாசிக்கில் உள்ள போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் என்கிற தனியார் ராணுவப் பள்ளியுடன் தொடர்பு உடையவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயங்கரவாதப் பயிற்சி அளிப்பது இந்தப் பள்ளியின் முக்கியப் பணி. இவர்கள் எல்லோரும் அபிநவ பாரதத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள். முசோலினியுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த டாக்டர் மூஞ்சே இவர்களின் ஆதர்சம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது இவர்களின் லட்சியம். பல்பானி (2003), ஜல்னா (2004), புர்னா (2004) ஆகிய இடங்களில் தொழுதுகொண்டு இருந்த முஸ்லிம்கள் மீது குண்டு வீசியவர்களும் இவர்களே என்றது விசாரணைக் குழு.

ஹைதராபாத்தில் மக்கா மசூதி, ஆஜ்மீர், நாண்டிட், மர்கோவா ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், விபத்துகள், குண்டு வெடிப்புகள் எல்லாவற்றுக்கும் இந்துத்துவ அமைப்புகளே பின்புலமாக இருந்துள்ளன. மலேகானில் சாத்வி பிரக்ஞாவின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடிக்கப்பட்ட இடம் 'சிமி' என்ற தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பு இருந்த கட்டடம் அருகில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் ஒட்டுத் தாடி, தொப்பி முதலியவையும் இருந்தன.

கிழக்கு வர்ஜீனியாவில் உள்ள 'பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு மையம்' பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ள பட்டியலில் உள்ள ஒன்று - ஆர்.எஸ்.எஸ்!

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் என்கிற வகையில் சரியான நேரத்தில் செய்துள்ள பொறுப்பான எச்சரிக்கை இது. இதற்கு இந்துத்துவவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டம் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி. சிதம்பரம், இந்துக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் என்றும், துறவின் அடையாளமாகவும், இந்திய மரபாகவும் உள்ள காவி என்கிற கருத்தாக்கத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார் எனவும் மோடி, ராஜ்நாத் சிங் முதலான பி.ஜே.பி. தலைவர்கள் கூச்சலிடுகின்றனர். உண்மையிலேயே காவி மீது இந்த மரியாதை இருக்குமேயானால் காவி உடை அணிந்து இன்று கம்பி எண்ணிக் கொண்டு இருப்பவர்களைத்தான் கண்டித்திருக்க வேண்டும். அதைச் செய்யும் துணிவு உண்டா இவர்களுக்கு? மாறாக, இந்தக் காவி உடை தரித்தவர்கள் கைது செய்யப்பட்டபோது வெளிப்படையாக ஆதரித்தவர்கள் அல்லவா இவர்கள்!

'மென்மை இந்துத்துவா' என்னும் பெயரை சம்பாதித்துள்ள காங்கிரஸ், இதிலும் பின்வாங்குகிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். முஸ்லிம் செய்தால் மட்டும் தவறு, இந்து செய்தால் சரி என்ற இரட்டை அளவுகோல் நாட்டுக்கு ஆபத்தானது!

- அ.மார்க்ஸ்

நன்றி: ஜூனியர் விகடன்

11.8.10

புகை கக்காத நவீன தொழில்நுட்பத்துடன் 150 பஸ்கள் தயாரிப்பு : புத்தாண்டு முதல் ஓடப்போகிறது


நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைந்த அளவில் புகையை வெளியிடும், "பி.எஸ்., 4' இன்ஜின்களைக் கொண்ட, "கிரீன் பஸ்களை' இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 150 கிரீன் பஸ்கள், புத்தாண்டில் சென்னை சாலைகளில் வலம் வர உள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதல் முறையாக தமிழகத்தில் கொண்டுவரப்படும் இந்த முன்னோடித் திட்டம், படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார், பஸ், டூவீலர்கள் என வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவு பல்வேறு நாடுகளில், பல்வேறு அளவீடுகளில் கணக்கிடப்படுகின்றன. இந்தியாவில், "பாரத் ஸ்டேஜ்' (பி.எஸ்.,) என்று அளவீடு செய்யப்படுகிறது. பெருகி வரும் வாகனம் வெளியிடும் புகையால், நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், "பி.எஸ்., 4' வகை இன்ஜின்கள் கொண்டதாக அமைக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தற்போது நம் நாட்டில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும், "பி.எஸ்., 3' வகையிலான இன்ஜின்களைக் கொண்டுள்ளன. "பி.எஸ்., 4' இன்ஜின்களை பயன்படுத்துவதால், புகையின் அளவும், சத்தமும் வெகுவாக குறையும். புகையில் கார்பன், கார்பன் மோனாக்சைடு குறைந்த அளவு வெளியாவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். இதைக் கருத்தில் கொண்டு, புதிய வாகனங்களுக்கு "பி.எஸ்., 4' வகை இன்ஜின்களை பயன்படுத்த மத்திய நகர்ப்புற அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத கிரீன் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மக்களின் போக்குவரத்துக்கு பிரதானமாக செயல்படுவது மாநகர பஸ்கள்தான். அரசு போக்குவரத்துக் கழகம் ஏழு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, 21 ஆயிரத்திற்கும் மேலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் "பி.எஸ்., 3' இன்ஜின்கள் உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கும் புது பஸ்களை,"பி.எஸ்., 4' இன்ஜினுடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, 150, "கிரீன் பஸ்கள்' வாங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அசோக் லேலண்ட் நிறுவனம் பஸ்களை தயாரித்து வருகிறது. புத்தாண்டு பரிசாக, சென்னையில் இந்த பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் இறுதியிலோ, ஜனவரி முதல் வாரத்திலோ இந்த பஸ்கள் சென்னை நகரில் வலம் வரும். இதன் தொடர்ச்சியாக, படிப்படியாக தற்போதுள்ள பஸ்கள் அனைத்தையும், "பி.எஸ்., 4' வகை பஸ்களாக மாற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது