கெய்ரோ:மக்கள் எழுச்சிப் போராட்டத்தினால் பதவியிலிருந்து விலகிய முன்னாள் எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மீதான விசாரணையில் இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையான நிராசையையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.
கெய்ரோ:பதவி விலகிய எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னிமுபாரக் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை அந்நாட்டில் வலுவடைந்துள்ளதைத் தொடர்ந்து முபாரக் மற்றும் அவரது மகன்களை விசாரணைச் செய்வதற்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜனநாயகரீதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் அரசு பணத்தை
கெய்ரோ, மார்ச். 7- எகிப்து நாட்டின் அதிபராக இருந்து புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய அதிபர் முபாரக் உலகப்பெரிய கோடீசுவரர்களையே தோற்கடிக்கும் அளவுக்கு பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.
எகிப்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் முபாரக். இவரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்
கெய்ரோ, மார்ச். 2 எகிப்தில், அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த பொதுமக்கள் ஓட்டெடுப்பு, பார்லிமென்ட் மற்றும் அதிபர் தேர்தல் நடக்கும் தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் முபாரக் குடும்பத்தினர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எகிப்தில், சமீபத்தில் அரசியல் சாசனத்தின் 11 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதிபரின் பதவிக் காலத்தைக் குறைப்பது, அவசர நிலைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள்
கெய்ரோ,பிப்:எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் தனக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு செல்லவிருப்பதாக ஜெர்மனியிலிருந்து வெளியாகும் ஸ்பீகல் பத்திரிகை தெரிவிக்கிறது.
மருத்துவ சோதனை என்ற பெயரில் முபாரக் வெளியேறவிருப்பதாகவும், இதற்காக ஜெர்மனியில் ஆடம்பர க்ளீனிக்கில் தங்க விருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவிக்கிறது.
இதுக்குறித்து அமெரிக்க அரசும் முபாரக் அரசும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. முன்பு ஈரானில் புரட்சி ஏற்பட்ட பொழுது அந்நாட்டு சர்வாதிகாரி ஷா பஹ்லவி மருத்துவ சிகிட்சை என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கெய்ரோ,பிப்.6:எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து அகற்ற நடந்துவரும் மக்கள் திரள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகுவதற்கு மறுத்து வருகிறார்.
இந்நிலையில் ABC தொலைக்காட்சியின் எகிப்திய செய்தியாளர் கிறிஸ்டியன் அமன்பூருக்கு 30 நிமிடங்கள் அளித்த பேட்டியில் முபாரக், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கைக் குறித்து பேசுகையில், "ஒபாமா சிறந்த மனிதர். ஆனால் அவருக்கு எகிப்திய கலாச்சாரத்தைக் குறித்து தெரியாது. நான் பதவி விலகினால் இஸ்லாமிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை கைப்பற்றிவிடும்.
எகிப்தில் நான் 62 காலமாக எகிப்தில் சேவையாற்றி வருகிறேன். எகிப்தியர்கள் தங்களுக்குள் மோதுவதுக் குறித்து கவலையாக உள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுக் குறித்து கவலையில்லை. எகிப்தைக் குறித்து கவனம் செலுத்துகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார் முபாரக்.