திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
