திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், துப்பு துலக்கப் போய், கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்' என, மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பினர். கடந்த பிப்ரவரி, 20ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 38 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அன்று இரவு 10.30 மணிக்கு மேல், மறுநாள் காலை 5.30 மணிக்கு முன், இந்தக் கொள்ளை நடந்திருக்க வேண்டும்
