பிராமணர்களை விமர்சித்து வம்புக்கு இழுக்கும் கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்’ என்று கோவை மாநகரப் போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கிறார், அந்தணர் யுவ மஹா ஷமிதியின் அமைப்பாளரான இராமசுப்ரமணியன். அவரிடம் பேசினோம். ''கருணாநிதியின் பல முகங்களில் ஒன்று, பிராமணிய எதிர்ப்பு முகம். தி.மு.க. ஜெயிச்சு இவர் பதவியில உட்கார்ந்துட்டா, நிர்வாக ஆலோசனை வழங்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும்
