தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் வெள்ளிகிழமை, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் முழு அடைப்பு போ ராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்திய கம் யுனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், மதிமுக, விவ சாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மரு ந்து கடைகள் என்று பல அமைப்புகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர்.நேற்று உச்ச நீதிமன்றத்தில்
வரும் ஞாயிறு வரை தமிழகத்துக்கு காவிரியி ல் தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டும் கர்நாடகா அதை நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ளதால் கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை இன்று கர்நாடக சட்டசபை கூட்டத்தில், காவிரி விவகாரம் பேசப்பட்ட போது, அனைத்து கட்சி உறுப்பினர்களும் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து, இக்கூட்டம் முடிந்ததும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் பேசுகையில் தமிழகத்திற்கு எக்காரனம் கொண்டும் தண்ணீர் திறந்து விட முடியாது.
கர்நாடக மாநிலத்திற்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. கர்நாடக மாநிலத்தில் மே, ஜூன் வரை குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீர்தான் உள்ளது. பயிர்களுக்குகூட தேவையான தண்ணீர் இல்லை.
4 அணைகளிலும் மொத்தம் 36 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. கிருஷ்ணசாகர் அணையில் 9 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. எனவே, கோர்ட் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இதுகுறித்து எனது தலைமையில் கர்நாடக காவிரி பாசன பகுதி எம்.பி.க்கள் பிரதமரை நாளை சந்தித்து அவரிடம் நிலைமையை எடுத்துக் கூற முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக