சீன அரசு தன்னுடைய வீட்டை திருடிக்கொண்டதாக குற்றம் சுமத்தி, தனது வீட்டை ஒப்படைக்கும்படி 50 அடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணை அதிரடிப்படையினர் காப்பாற்றி, விசாரணை செய்து வருகின்றனர்.சீனாவின் Lia Sun என்ற 31 வயது பெண்மணி, நேற்று Zhujiang என்ற ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது Guagzhou நகர் போலீஸார் அதிரடியாக காப்பாற்றினர்.அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய சீன
அரசு ஆக்கிரமித்து கொண்டதாகவும், அதற்கான உண்மையான மதிப்பீட்டு தொகையைக் கொடுக்காமல், மிகவும் குறைவாக கொடுத்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.

மேலும் அவருடைய கோரிக்கை தகுந்த அதிகாரிகள் கொண்ட குழுவினரால் பரிசீலிக்கப்படும் என்றும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதாக அவருக்கு நம்பிக்கை அளித்த காவல்துறையினர், இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக