ராமாயணத்தின்
நாயகனான "ராமர்" ஒரு மோசமான கணவ ராக இருந்தவர், என பிரபல வழக்கறிஞரும்
பா.ஜ.க.வின் மா நிலங்களவை எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி கூறியிருந்தா ர்.சில மீனவர்கள் சொன்னார்கள் என்பதற்காக, தாலி கட்டிய மனைவியை "வனவாசம்" அனுப்பிய கணவர் ராமர்.எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது.ராமர் தான் இப்படி என்றால், அவ ரது தம்பி "லட்சுமணன்" இன்னும் மோசம்,என்று ராம்ஜெத்ம லானி குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, லூதியானாவில் செயல்படும் "ஸ்ரீ ஹிந்து நியாயி கவுன்சில்" என்ற ஹிந்து அமைப்பு, ராம்ஜெத்மலானியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, லூதியானாவில் செயல்படும் "ஸ்ரீ ஹிந்து நியாயி கவுன்சில்" என்ற ஹிந்து அமைப்பு, ராம்ஜெத்மலானியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
மேலும், அவரை பா.ஜ.க.விலிருந்து உடனே நீக்கவேண்டும், என பாஜக மேலிடத்தை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.
ராம்ஜெத்மலானி மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில், தீபாவளிக்குப்பிறகு ராஜெத்மலாணியை எதிர்த்தும் பாஜகவை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்படும், என்றும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ராமரை குறித்த தனது கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள ராமஜெத் மலானி, எனது பார்வையில் கெட்டவராக இருந்த ராமர், தொடர்ந்து தவரானராகவே உள்ளார், எனக்கூறிய அவர், ராமரின் பிறப்பு குறித்தும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ராமரை குறித்த தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்,ராமஜெத்மலானி.
- மறுப்பு மீடியா செய்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக