இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்செயல் களில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமெனகோரி 50,000 இந் திய பிரஜைகளின் கையொப்பங்களுடன் கூடிய வி சேட மகஜர் ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர் வதேச மன்னிப்பு சபையின் இந்திய கிளை இந்நடவ டிக்கையை மேற்கொண்டுள்ளது.
இலங்கை பிரஜைகளின் உரிமைகளை உறு தி செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். சட்டவிரோத படுகொலை கள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட பல்வே று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கையை இலங்கை அரசு எடு க்க, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் குறித்த மகஜரின் ஊடாக மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேற்று வெளிவிவகார அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா கடிதத்தை இந்திய பிரதமரிடம் கையளித்த பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் வி.புலிகளின் தடையை நீக்குமாறு கோரி, இந்திய தீர்ப்பாயத்தில் சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வி.புலிகளின் சுவிற்சர்லாந்து இணைப்பாளர், சென்னையில் உள்ள சட்டத்தரணி ஊடாக இச்சத்திய கடதாசியை முன்வைத்துள்ளார்.
குறித்த இணைப்பாளர் தீர்ப்பாயத்தின் முன்னால் முன்னிலையாவாரா என தீர்ப்பாயத்தின் நீதிபதி கேள்வி எழுப்பிய போது, அவர் இந்தியாவில் கைது செய்யப்படமாட்டார் என்று உறுதி வழங்கப்படுமானால், தீர்ப்பாய நடவடிக்கையில் முன்னிலையாக தமது கட்சிக்காரர் தயார் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதையடுத்து மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிந்து கூறுமாறு நீதிபதி, அரச சட்டத்தரணியிடம் கேட்டுக்கொண்டதுடன், தீர்ப்பாயத்தின் அமர்வு எதிர்வரும் 29ம் திகதி மதுரையில் நடைபெறும் என தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக