இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது.இன்று ஈரா னிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அ மெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்த த் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரி த்துள்ளதாக அறிவித்துள்ளது.ஈரான் தயாரித்த டோ ர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூர ம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித் தொட போதுமான இலக்காக
இருப்பதால் இது இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத் தலாக மாறியுள்ளது.
ஏவுகணைகளை எடுத்துச் சென்று இலக்குத் தவறாமல் தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானம்.
ஈரான் அணு குண்டை உருவாக்குகிறது, அதனுடைய அணு குண்டு தயாரிப்பு முயற்சிகளை நிர்மூலம் செய்யும் தாக்குதலுக்கு தயார் என்று இஸ்ரேல் தொடர்ந்து மிரட்டி வருகிறது.
ஆனால் ஈரானோ தமது முயற்சி வெறும் மின்சாரத் தயாரிப்பிற்கு மட்டுமே என்று தெரிவித்து வருகிறது.
ஆனால் ஈரான் அணு குண்டு தயாரிப்பில் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது என்று ஐ.நா கடந்த வாரம் கவலை வெளியிட்டிருந்தது.
மாறாக ரஸ்யாவின் உறுதியான ஆதரவு இந்த முறை ஈரானுக்கு இருப்பதாக அந்த நாடு கருதுகிறது.
அதேவேளை இஸ்ரேல் தாக்குதல் நடாத்தினால் அதுபற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை அதை எதிர்கொள்ள தாம் தயாராகிவிட்டதாக ஈரான் அறிவித்துவிட்டது.
ஈரானின் இந்த அறிவிப்பு இஸ்ரேல் – பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பாரிய தன்மானப் பிரச்சனையாக மாறியிருக்கிறது.
இஸ்ரேல் – அமெரிக்கா – பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தாக்குதல்களை சந்திக்க தயாராகாமல் ஈரான் அணுசக்தி வல்லரசாக மாற முடியாது என்பது யதார்த்தமான உண்மையே.
வரும் அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னர் ஈரான் மீதான தாக்குதல் குறித்து பேச முடியாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகுவிற்கு சென்ற மாதமே தெரிவித்துவிட்டார்.
இந்த இடை வெளிக்குள் ஈரான் மிக வேகமாக முன்னேறி வருகிறது, அமெரிக்க அதிபர் தேர்தலன்று அணு குண்டு வெடித்து பரிசோதித்தாலும் ஆச்சரியப்பட இல்லை என்ற வேகத்தில் ஈரானுடைய நகர்வு இருக்கிறது.
இதைத்தவிர அமெரிக்கா – இஸ்ரேலிடம் இல்லாத புதிய பற்றியாற்றிக் 320 இரக ஏவுகணைகளை ரஸ்யா ஈரானுக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்ததும் ரஸ்யாவின் தொழில் நுட்பமா இல்லை அமெரிக்கவின் தொழில் நுட்பமா உயர்ந்தது என்ற பலப்பாபரீட்சைக்குக் களமாக ஈரான் அமைய வாய்ப்புள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடந்தால் அது உலகப் போராக மாறும் என்று ஈரானிய அதிபர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய சியோனிசத்தை தாம் எதிர்கொள்ள தயார் என்றும் ஈரானிய அதிபர் அகமது நஜாத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஈரானுடன் போர் வெடித்தால் அதை எதிர் கொள்ள அமெரிக்கா அதி நவீன கருவி ஒன்றை அறிமுகம் செய்யாவிட்டால் வெற்றி சாத்தியமாகாது.
வரும் 2013 உலக மக்களுக்கு மேலும் சுவாரஸ்யமாக அமையலாம், அதேவேளை ஈரானுடன் போர் நடந்தால் உலகப் பொருளாதாரம் றிபிள் டிப் என்னும் மூன்றாவது பாதாளத்தில் விழும் என்பதும் கவனிக்கத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக