தீவிரவாத போக்குடைய அரசியலை எதிர்த்து உலக நாட்டுகளின் தலைவர்கள் போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறுவுறுத்தியுள்ளா ர்.இன்று நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை கூட்டட்தில் உரையாற்றிய போது, கடந்த இரு வார ங்களாக அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்க ளால் நடத்தப்படும் போராட்டம் குறித்து அவர் கரு த்து தெரிவித்தார். அப்போது, வன்முறை, தீவிரவாத போக்கு என்பவற்றுக்கு
எதிராக உலக தலைவர்கள் குரல் கொடுப்பது கட்டாயமாகிறது. சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிரான தாக்குதல்கள், ஐ.நாவின் சிந்தனைகள் மீதான தாக்குதலாகும். எமது எதிர்கா லம் லிபியாவில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க தூதுவர் கிரிஸ்தோபர் ஸ்டீவன்ஸ் போன்றவர்களை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கப்படு கிறது. அவர்களை படுகொலை செய்தவர்களை அடிப்படையாக கொண்டல்ல.
எதிராக உலக தலைவர்கள் குரல் கொடுப்பது கட்டாயமாகிறது. சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிரான தாக்குதல்கள், ஐ.நாவின் சிந்தனைகள் மீதான தாக்குதலாகும். எமது எதிர்கா லம் லிபியாவில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க தூதுவர் கிரிஸ்தோபர் ஸ்டீவன்ஸ் போன்றவர்களை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கப்படு கிறது. அவர்களை படுகொலை செய்தவர்களை அடிப்படையாக கொண்டல்ல.
அமெரிக்காவையோ அல்லது மேற்குலகம், இஸ்ரேல் போன்ற மத்திய அரசியல் கொள்கைகள் உடைய நாடுகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களையோ, அல்லது வெறுப்பவர்களையோ ஓரங்கட்ட வேண்டிய நேரமிது.
இவ்வகையான அரசியல் பிரிவுகள், கிழக்குக்கும் - மேற்குக்கும் இடையில், தெற்குக்கும் - வடக்கிற்குக்கும் இடையில், இஸ்லாமியர்களுக்கும் - கிரிஸ்தவர்களுக்கும் இடையில், இந்துக்கள் மற்றும் யூதர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு இடையில் படுகுழிகளை தோண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது. மீறி அனுமதிப்போமாயின், சுதந்திரத்திற்கான வாக்குறுதியை நிச்சயம் அது தராது.
நாங்கள் சேர்ந்து செய்ய நினைப்பவற்றிற்கோ, எமது பிள்ளைகளை படிக்க வைப்பதற்கோ, தாம் தகுதியுடையவர்கள் என அவர்கள் நினைப்பவற்றை உருவாக்கி கொடுப்பதற்கோ, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கோ, ஜனநாயக வாக்குறுதிகளை விரிவுபடுத்துவதற்கோ இவ்வாறான அரசியல் பிரிவுகள் நிச்சயம் கடினமான தடைகளை போட்டுவிடும். ஐ.நாவில், வன்முறைக்கும், பொருமையற்ற தன்மைக்கும் எந்த இடமும் இல்லை என இன்று நாம் அறிவிப்போம் என்றார்.
ஈரானின் அணுவாயுத செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைக்கையில், ஈரானின் அணு ஆயுதங்களை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். ஈரானின் அணுவாயுதங்களை தடுக்க அமெரிக்கா என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்வோம் என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னமும், 6 வாரங்களே உள்ள நிலையில் ஐ.நாவில் ஜனாதிபதியாக ஒபாமா நிகழ்த்திய இறுதி உரை இதுவாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக