தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.9.12

மான்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான வரிகள் ரத்து : ப.சிதம்பரம்


மான்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான வரிகளை ரத்து செய்வதாக மத்திய நிதி அ மைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.மான்ய வி லையில் வழங்கும் எரிவாயு சிலிண்டர்களின் எண் ணிக்கையை 6 ஆக குறைத்துள்ள மத்திய அரசு, மா ன்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான சுங்கவரி, கலால்வரியை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் மான்யம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை 150 வரை குறையும் என்று தெ ரிகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, வரி விதிப்பை
20 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதத்துக்கு குறைத்து உள்ளதாகவு ம் தெரிகிறது. இதை டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். இந்த திட்டங்கள் எதிர்வரும் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் தெரிய வருகிறது. மான்ய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் அளவைக் குறைத்தது, மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிக்கவே மத்திய அரசு  அதிரடியாக இப்படித் திட்டங்களை அறிவிப்பதாகவும் தெரிகிறது.

0 கருத்துகள்: