தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.12

சிரியா அதிபரை கொல்பவருக்கு ரூ.135 கோடி பரிசு. புரட்சிப்படையின் அறிவிப்பால் பரபரப்பு.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 18 மாதங்களாக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை அடக்க ராணுவ ம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுக ளில் அகதிகளாக உள்ளனர். 25 லட்சம் பேர் அடிப்ப டை வசதி இன்றி
தவிக்கின்றனர். இந்த தகவலை ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், உலக நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதிபர் ஆசாத் உடன்படிக்கைக்கு வர மறுக்கிறார். போராடும் மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை களம் இறங்கி ஆசாத் ஆதரவு ராணுவத்துடன் போரிட்டு வருகிறது.

தற்போது தங்களின் பிடியில் இருக்கும் அலெப்போ நகரை தக்க வைத்து கொள்ள ராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பதவி விலக மறுத்து ஜனநாயக பாதைக்கு வழிவிட மறுக்கும் அதிபர் ஆசாத்தை கொலை செய்பவருக்கு ரூ. 135 கோடி பரிசு வழங்கப்படும் என சிரியா விடுதலை படை (புரட்சி படை) அறிவித்துள்ளது. 

இந்த தகவலை துருக்கியில் இருந்து வெளியாகும் அன டெலூ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் புரட்சி படையின் கமாண்டர் அகமது எரிஜாஷி இதை அறிவித்துள்ளார். பரிசு தொகையை சிரியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தங்களது ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் வசூலித்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே அதிபர் ஆசாத்தின் தங்கை புஷ்ரா அல்-ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக அல் அராபியா டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. இவரது கணவரும் உளவு துறை தலைவருமான ஆசிப் ஷவ் கத் கடந்த ஜூலை மாதம் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டதை தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.

0 கருத்துகள்: