பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஜி12 பகுதியில் உள்ளது உமரா ஜாபர். இந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ரிம்ஷா மசி. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இந்த சிறுமி, புனித குரான் புத்தகத்தின் பக்கங்களை எரித்ததாக சயத் முகமது உம்மத் என்பவர் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து ரம்னா போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரிம்ஷாவை போலீசார் கடந்த மாதம் 18ம் தேதி கைது
செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது.
சிறுமி மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. சிறுமி மன வளர்ச்சி குன்றியவள். அவளை விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வரை கோரிக்கை சென்றது.
இந்நிலையில் சிறுமிக்கு ஜாமீன் வழங்க கோரி இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். அதற்கான காரணம் எதுவும் தனது உத்தரவில் நீதிபதி கூறவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக