தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.8.12

சென்னையிலிருந்தும் வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்


அசாம் கலவரத்தால் தமக்கு ஆபத்து என அச்சமடை ந்த வடகிழக்கு மாநில மக்கள் கடந்த இரு தினங்க ளாக கர்நாடகாவிலிருந்து வெளியேறிவருகின்றன ர். பலர் பெங்களூரிலிருந்து கௌஹாத்திக்கு திரும் பிக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் பலர் ரயில் கிடக்காமல் காத்திருக்கின்றனர்.இதற்கிடையே கர் நாடகத்தில் ஏற்பட்ட பீதி வட கிழக்கு மாநிலத்தவர் கள் மூலம் சென்னைக்கு பரவியது. இதையடுத்து செ ன்னையிலிருந்தும்
தங்களது குடும்பத்தினர் அழைப்பின் பேரில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு எழும்பூரில் இருந்து கவுகாத்திக்கு சென்ற திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள், மாணவர்கள் பெட்டி படுக்கையுடன் இந்த ரெயிலில் பயணம் செய்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த ரெயிலில் கூடுதலாக 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டன. வழக்கமான 2 பொதுப்பெட்டிகளுடன் கூடுதலாக இணைக்கப்பட்ட பெட்டிகளில் மொத்தம் 3000 பேர் பயணம் செய்தனர்.

இதேபோல பெங்களூரில் இருந்து கவுகாத்திக்கு 2 சிறப்பு ரெயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக நேற்று இரவு கவுகாத்திக்கு இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் இன்று அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் சென்னை சென்ட்ரல் வந்தது. இங்கு ஒரு சிறப்பு ரெயிலில் 2 பெட்டிகள் கூடுதலாகவும், மற்றொரு சிறப்பு ரெயிலில் 3 பெட்டிகள் கூடுதலாகவும் இணைக்கப்பட்டன.

சிறப்பு ரெயில் இயக்கப்படும் தகவல் அறிந்த வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பெட்டி படுக்கைகளுடன் குவிந்தனர். வழக்கமான பயணிகளுடன் நிறைந்திருக்கும் சென்ட்ரல் நிலையம் இவர்களின் கூட்டத்தால் திணறியது.

ஒரே நேரத்தில் சுமார் 2000 பேர் திரண்டு இருந்ததால் ரெயில்வே அதிகாரிகளுக்கும் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஒரு வழியாக வடகிழக்கு மாநில இளைஞர்களையும், தொழிலாளர்களையும், கூடுதல் பெட்டிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

சென்னை எமக்கு பாதுகாப்பாக, இரண்டாவது தாய்வீடாக உள்ள போதும், குடுபத்தினர் அழைப்பினரின் பெயரில் குடும்பத்தை பாதுகாக்கவே சொந்த ஊர் செல்கிறோம் என சென்னை மற்றும் எழும்பூரிலிருந்து கௌஹாத்திக்கு புறப்பட்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: