ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உட்பட நேட் டோ கூட்டுப் படையினர் மீது தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது கண்கூடு.எதிர்வரும் 2014 இற்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்று ம் நேட்டோ படையினரை மீள அழைப்பதற்கு அமெ ரிக்கா முடிவு செய்திருக்கும் இத்தருணத்தில் நேற்று வியாழக்கிழமை காலையில் நேட்டோவின் ஹெலி காப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாக தலிபான் கள் இன்று வெள்ளிக்கிழமை
பொறுப்பேற்றுள்ளனர்.நேட்டோ மற்றும் ஆப்கா னிஸ்தான் அரச படையினர்கள் இணைந்து பயணித்த பிளாக் ஹாவ்க் எனும் இந்த ஹெலிகாப்டர் வீழ்ந்து நொறுங்கியதால் இதில் பயணித்த நேட்டோ படை வீரர்கள் 7 பேரும், ஒரு மக்கள் தொடர்பாளர் மற்றும் ஆப்கான் படையினர் மூவர் உட்பட 4 ஆப்கானிஸ்தானியர்களும் சேர்த்து மொத்தம் 11 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.இதேவேளை ஹெலிகாப்டர் வீழ்ந்து நொறுங்கியதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனவும் இவ் விபத்திற்கும் தலிபான்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஆப்கானிஸ்தான் தரப்பில் மறுப்புக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை தலிபான்கள் தரப்பில் நேற்று கண்டஹார் மாகாணத்தில் வீழ்ந்து நொறுங்கிய நேட்டோவினரின் ஹெலிகாப்டர் தம்மால் சுட்டு வீழ்த்தப் பட்டது என தலிபான்களிக்ன் பேச்சாளர் குவாரி யூசெஃப் அஹ்மடி ஊடகங்களுக்குக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக