தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.8.12

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான தீர்ப்பு வெளியானால் ஏற்கமாட்டோம். முன்னாள் பிரதமர் கிலானி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதை ஏற்க மாட் டோம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலை வரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ரஸô கிலானி தெரி வித்தார்.அந்த வழக்கின் கீழ் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ர ஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அது அரசமைப்புச் சட்ட த்துக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்துவிடும்; இதைக் கண்டித்து மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு
எதிரான ஊழல் வழக்கு விசாரணையை மீண் டும் தொடங்க நட
வடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தர வை முந்தைய பிரதமர் யூசுப் ரஸô கிலானி செயல்படுத்த மறுப்பு தெரிவித்தா ர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று தனது பதவியை இழந்தார்.

 இதே விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மறுத்துள்ள இப்போதைய பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃபுக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் ஆகஸ்ட் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜா பர்வேஸ் அஷ்ரஃபும் தண்டனைக்கு உள்ளாகி, பதவி இழக்க நேரிடும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக யூசுப் ரஸô கிலானி லாகூரில் செய்தியாளர்களிடம் கூறியது:÷அனைத்து நாள்களும் ஒரே மாதிரியாக இருந்துவிடாது. நான் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பணிந்து, ஜனநாயகத்தைக் காப்பதற்காக எனது பதவியை தியாகம் செய்தேன்.

 ஆனால், இம்முறை (அஷ்ரஃப் விவகாரத்தில்) அது போன்று விடமாட்டோம். அஷ்ரஃபுக்கு எதிராக தீர்ப்பு வெளியானால், அதை எதிர்ப்போம். மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

0 கருத்துகள்: