தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.8.12

அதிமுக கட்சிப் பிரமுகர்கள் எம்.எல்.ஏ எம்பி க்களுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை


அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிப் பிரமுகர்கள், எம் எல் ஏ, எம் பி,அமைச்ச ர்க்களுக்கு, அதிமுக பொது செயலாளர், செல்வி ஜெ யலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதாவது, கட்சி நிகழ்ச்சிகள், அரசியல் பொது நிகழ்ச்சிகள், அரசியல் கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடக்கும் போது, அத ற்கான விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், சுவரொட்டிகள் இவைகளில்
கட்சிப் பிரமுகர்கள், எம் எல் ஏ, எம் பி க்கள், அமை ச்சர்கள் இவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மீறினால், கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் அதிமுக தலைமை அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
   
மேலும், விளம்பரங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் இவைகளில், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்களின் படங்களோடு, சம்பந்தப் பட்டவர்களின் பெயர்கள் மட்டும் இடம்பெற்றால் போதும் என்றும் அந்த அதிமுக தலைமை அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்  பட்டுள்ளது.
   
ஒருவர் பெயர் இடம்பெற்று, ஒருவர் பெயர் இடம் பெறவில்லை என்கிற சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கவே இந்த முடிவு என்றும் அதிமுக அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

0 கருத்துகள்: