தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.8.12

48 ஈரானியர்களை நாங்களே கடத்தியுள்ளோம் : பொறுப்பேற்றது சிரிய கிளர்ச்சிப் படை


நேற்று முன் தினம்,  சனிக்கிழமை 48 ஈரானியர்கள் சிரிய கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட சம்பவ த்துக்குநேற்று ஞாயிற்றுக் கிழமை சிரிய கிளர்ச்சிப்ப டை பொறுப்பேற்றுள்ளது. கடத்தப்பட்டவர்கள் ஈரா னின் புரட்சிப்படையைச் சேர்ந்த காவலர்கள் எனவு ம் இவர்கள் முஸ்லிம் யாத்திரீகர்கள் அல்ல எனவும் ஈரானின் தேசிய ஊடகம் கூறியுள்ளது.துபாயைத் தளமாகக் கொண்டு செயற்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இவர்களை
கிளர்ச்சிப்படையினர் துப்பாக்கி முனையில்
வைத்திருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ள து. இதில் கடத்தப்பட்டவர்கள் கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் சிரியாவின் பழைய கொடி முன்பாக அமர்ந்திருப்பதும் தென்படுகின்றது.

சிரிய விவகாரம் குறித்து துருக்கியுடன் ஈரான் முரண்பட்ட கொள்கையைக் கொண்டுள்ள போதும் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க உதவும் படி ஈரான் துருக்கியையும், கட்டாரையும் கேட்டுள்ளது.
நன்றி: 4தமிழ் மீடியா

0 கருத்துகள்: