துருக்கிய யுத்த விமானங்கள் ஆறு தற்போது சிரி யாவின் எல்லைக்கு அருகாமையில் பறந்தபடி உள் ளன, கடந்த வெள்ளியே விமான எதிர்ப்பு ஏவுகணை கள் எல்லைப் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுவிட்டன.இ ந்த நிலையில் எந்த நேரமும் போர் வெடித்துவிடலா ம் என்ற பதட்டம் இரு பகுதிகளிலும் நிலவிக் கொண் டிருக்கிறது.சற்று முன்னர் சிரியாவின் தலைநகரில் இருந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிரிய அதிபர் ஆஸாட் துருக்கியுடன் தாம் போரிட விரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும்
அவர் கூறும்போது துருக்கியின்விமானத்தை சுட்டு வீழ்த்தியது யாரென்றே தமக்கு தெரியாதென்றும், பின்னால் ஏதோ கபட நோக்கம் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
அவர் கூறும்போது துருக்கியின்விமானத்தை சுட்டு வீழ்த்தியது யாரென்றே தமக்கு தெரியாதென்றும், பின்னால் ஏதோ கபட நோக்கம் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை துருக்கிய யுத்த விமானங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட பொது எல்லைக்குள் தற்போது பறந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துருக்கி எல்லையை விட்டு சுமார் ஒன்பது கி.மீ தொலைவு பொது எல்லைக்குள் துருக்கியின் போர் விமானங்கள் நுழைந்து பறந்து கொண்டிருக்கின்றன.
இரண்டு இஸ்லாமிய நாடுகளும் மோதலில் குதித்தால் மத்திய கிழக்கு தீப்பிடிக்க அதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது, எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபமென கைமேல் இலாபம் பார்க்க பல நாடுகள் காத்துள்ளன.
இதற்கிடையில் சிரியாவின் இராணுவ ஜெனரல் ஒருவரும் அவருடன் பணியாற்றிய 85 இராணுவத்தினரும், குடும்பத்தினரும் எல்லை தாண்டி துருக்கி வந்துள்ளனர்.
சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்க இப்போது துருக்கியின் எல்லைகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு போர் ஆரம்பித்தபோது தொடங்கிய அகதிகள் தொகை இப்போது 185.000 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி கூறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக