குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடக் கூடாது என சங்மா விடுத்த கோரிக் கையை தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி நிராகரித் துள்ளார். இதன் மூலம் பிரணாப்பின் தேர்தல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.குடியரசுத் தலை வர் வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார் பிர ணாப் முகர்ஜி. எனினும் அவர் இந்தியப் புள்ளியியல் துறையில் ஆதாயம் பெரும் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும், அதனால்
குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்கக் கூடா தென்றும் கூறி, அவருடைய தேர்தல் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம், பி.ஏ.சங்மா முறையிட்டிருந்தார்.
இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி விளாக்கம் அளிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் பிரணாப் தரப்பிடம் கேட்டிருந்தது. பிரணாப் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபாட்டிருந்ததால், பிரணாப் சார்பாக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோர் ஆஜராகி பிரணாப் முகர்ஜி கடந்த 20 ம திகதி பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், ஆதாயம் பெரும் பதவியில் இல்லை என்றும் எழுத்துப் பூர்வ விளக்கம் அளித்தார்கள்.
அதைத் தொடர்ந்து சங்மாவின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டு, பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக