தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.7.12

சிரியப் போர் வடக்கு லெபனானுக்குள் நுழைந்தது


சிரியாவிற்குள் நடைபெறும் உள்நாட்டுப் போர் தற் போது லெபனானுக்குள் நுழைந்துள்ளது.சனிக்கிழ மை சிரியப் படைகள் வட லெபனானிற்குள் தமது ஆட்டிலறி தாக்குதலை முன்னெடுத்தன, சரமாரியா க பொழிந்த குண்டுகளில் ஐந்து பேர் மரணித்து பலர் காயமடைந்தார்கள், இறந்தவர்களில் மூவர் பெண்க ள்.சிரியாவின் அதிபர் ஆஸாட்டை பதவிக்கட்டிலில் இருந்து இறக்குவதற்காக போராடும் போராளிகள் லெபனானின் வட பகுதியில்
தமது முகாம்களை அமைத்து சிரிய அதிபருக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இவர்கள் சிரியாவில் தாக்குதலை நடாத்திவிட்டு லெபனானுக்குள் நுழைந்தபோது இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுமார் 20 கி.மீ நீளமான எல்லைப் பகுதியை நோக்கி இந்தத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
வட லெபனான் மீதான ஆட்டிலறி தாக்குதல்கள் போரின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகின்றன.
ஏற்கெனவே துருக்கியின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா, இப்போது லெபனானுக்குள் நகர்ந்துள்ளது.
சிரியாவில் நடப்பது உள்நாட்டு போர்தான் என்ற ஐ.நாவின் வரையறைகளை உடைத்து அங்கு நடப்பது போரே என்று சிரிய அதிபர் ஆஸாட் முன்னரே பிரகடனம் செய்திருந்தார்.நேட்டோவின் பரம எதிரியான ஹிஸ்புல்லா கூடுகட்டியிருப்பது லெபனானிலேயே.. எனவேதான் ஹிஸ்புல்லா  கூடுகளை கலைத்தால் நேட்டோ களமிறங்க முடியாது என்ற வழிகாட்டல் ஆஸாட்டுக்கு இருப்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது.

0 கருத்துகள்: