எதிர்வரும் ஆக்டோபர் மாதத்திலிருந்து கோவாவி ன் கடற்கரைகளில் புகைப்பிடிப்பதற்கு தடைச்சட்ட ம் அமல்படுத்தப்படவுள்ளது.1997, 2003 புகையிலை தடைச்சட்டங்களின் கீழ், கோவாவின் புகையிலை கட்டுப்பாட்டு ஆணையகம் இந்நடைமுறையை அம ல்படுத்தவுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பானாஜியின் மிராமார் கடற்கர முதலாவது பொதுவிடமாக இச்ச ட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படவிருக்கிறது. விழிப் புணர்வு என்பது மிக முக்கியமானது. ஆனால் நாங் கள் மிக பிரபலமான கலங்
குட் கடற்கரையிலிருந்து இச்சட்டத்தை அமல்படுத் த தொடங்கினால், எதிர்ப்பு அதிகரித்துவிடும். அதனால் குறைவான சுற்றுலா பயணிகள் வந்து போகும், மிரமார் கடற்கரையிலிருந்து இந்த நடவடிக்கையை தொடங்குவதாக கோவா சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் பாமலா மஸ்கரென்ஹாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் இச்சட்டத்தின் மூலம் கோவாவில் ஹூக்கா (Hookhas) மூலம் புகைப்பிடிப்பதற்கும் தடை கொண்டுவரப்படடுள்ளது. புகையிலை மாத்திரமல்லாது கைத்தொழில் இரசாயன நிகொடினும் டோக்சிஸ் இராசயனமும் அவற்றில் கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக