அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வேலையில்லா த் திண்டாட்டத்தைப் போக்கவேண்டும் என்றால், இ ந்தியா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டு க்கான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளா ர்.அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்கடனில் இந்த கருத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், "சில்லறை வர்த்தகத் தில் அந்நிய முதலீடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளில் பொருளாதார
சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள் ளவேண்டும். சர்வதேச அளவில் நெருக்கடி நிலவும் இந்த நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் பாராட்டத் தக்கது. எனினும் இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாக இருப்பதாக அமெரிக்க வணிக நிறுவனத்தினர் எங்களிடம் தெரிவிக்கின்றனர். அன்னிய முதலீடு தொடர்ந்தால் தான் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அவர்களது பொருளாதார எதிர்கால வளர்ச்சி குறித்து இந்தியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியா எடுக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உதவி தொடரும் என்றார்.
கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அமெரிக்காவின் டைம் பத்திரிகை விமர்சன கட்டுரை எழுதியிருந்தது. அதில் பிரதமர் தலைமையிலான தற்போதைய ஆட்சி ஊழல் மிகுந்ததாக காணப்படுவதாகவும், உணவுப்பொருள் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு என்பனவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக