தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.7.12

உ.பி:மருத்துவரின் பணியைச் செய்யும் துப்புரவுத் தொழிலாளி!

புதுடெல்லி:உ.பியில் அரசு மருத்துவமனைகளின்அவல நிலையை படம் பிடித்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது.புலந்த் சாகரில் உள்ள அரசு மருத்துவ மனையில் 4-வது பிரிவு பணியாளர் ஒருவர் நோயாளிக்கு சிகிட்சை அளித்துள்ளார். இங்கு 23 மருத்துவர்கள் பணியாற்றிய பொழுதும் துப்புரவுத் தொழிலாளி நோயாளிகளின் காயங்களுக்கு தையல் போடுகிறார். இது மருத்துவமனையின் முதன்மை மெடிக்கல் அதிகாரிக்கு தெரிந்தே நடப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், நோயாளிகளை கவனிக்க யாரும் இல்லாத சூழலில் நோயாளிகளுக்கு மருந்துகளை கொடுக்க துப்புரவுத் தொழிலாளிகள் உதவுவதாகவும், நோயாளிகளின் காயங்களுக்கு தையல் போட்ட சம்பவம் குறித்து தெரியாது என்றும் முதன்மை மெடிக்கல் அதிகாரி எஸ்.ஹெச்.எஸ்.தனு கூறுகிறார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் அஹ்மத் ஹஸன் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்: