எலிசபெத் மகாராணியாரை கௌரவித்து காமன்வெல்த் செயலகம் ஏற்பாடு செய்திருந்த விருந்துபச்சாரத்தில், இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெ ரிவித்து மத்திய லண்டனில், இன்று நண்பகல் மூவாயி ரத்துக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்று கூ டி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சர்வதேச கவனம் பெ ற்றுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு லண்டன் பாராளுமன்ற த்தின் முன்பு தமிழர்கள் நடத்திய
தொடர் ஆர்ப்பாட்டங் களுக்கு பிறகு, லண்டனில் தமிழர்கள்
நடத்தியுள்ள மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப் பாட்டமாக இது பதியப்பட்டுள்ளது.தொடர் ஆர்ப்பாட்டங் களுக்கு பிறகு, லண்டனில் தமிழர்கள்
விருந்துணவு உபச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று நண்பகல் 12.00 மணியளவில் மால் மாளிகையை நோக்கி ராஜபக்ச சென்றுகொண்டிருந்த போது, அவர் பயணித்த கார் மீதும் சராமாரியாக கூழ்முட்டைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விருந்துபச்சாரத்தில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் உட்பட 70 சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். எனினும் அவர்கள் அங்கு விருந்துபசாரத்திற்காக வருகை தந்த போது வெளியில் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை எதிர்பார்த்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அந்தந்த நாட்டு தேசிய கொடிகளுடன் பிற தலைவர்கள் வந்த போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜபக்சவின் காரில் சிறீலங்கா தேசிய கொடி பொருத்தப்பட்டிருக்கவில்லை.
விருந்துபச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே, மால்புரூஹ் ஹவுஸ் முன்னிலையில் தமிழர்கள் அதிகளவில் ஒன்றுகூடத்தொடங்கினர். ராஜபக்சவின் உருவ பொம்மையும் இதன் போது தீயிட்டு கொளுத்தப்பட்டது.
விருந்துபச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே, மால்புரூஹ் ஹவுஸ் முன்னிலையில் தமிழர்கள் அதிகளவில் ஒன்றுகூடத்தொடங்கினர். ராஜபக்சவின் உருவ பொம்மையும் இதன் போது தீயிட்டு கொளுத்தப்பட்டது.
விருந்துபச்சாரத்திற்கு மகாராணியார் வருகை தந்ததும், மால்புரூஹ் ஹவுஸில் உள்ள Bleinheim Saloon இன், நுழைவாயிலில், தம்மை சந்திக்க வரும் விருந்தினர்கள் (Guest) வரிசையில் வைத்து, ராஜபக்சவுடன் கைகுலுக்கிவிட்டு ஒரு மிக குறுகிய நேரத்தில் அடுத்த நபரிடம் சென்றுவிட்டதாக மால்புரூஹ் ஹவுஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் நகரிற்கு இடையூறு விளைவிக்கப்படாததால், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக படைநிறுவுவதை தாம் விரும்பவில்லை என லண்டன் காவற்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் கடந்தமுறை அனுபவங்கள் இருப்பதால் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி போராட்டத்திற்கு என தனியான இடம் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.
பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம் அமைப்பின் நிறுவனர் சென் கந்தையா தெரிவிக்கையில், ராஜபக்ச மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போது உள்ளன. அதனாலேயே பிரிட்டிஷ் தலைவர்கள் ராஜபக்சவை சந்திப்பதை விரும்பவில்லை. அவர் இங்கு வரவேற்கப்படவில்லை என்பது, உரை இரத்து செய்யப்பட்டதிலிருந்தே தெரிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதேவேளை ராஜபக்ச இன்று காலை காமன்வெல்த் ஃபோரமில் நடத்த தயாராகவிருந்த உரை இறுதிநேரத்தில் இரத்து செய்யப்பட்டது தொடர்பிலும் பல்வேறு பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் Evening Standard ஊடகம் ஆர்ப்பாட்டத்தை படம்பிடித்து கொண்டிருந்த போது, இல்ஃபோர்ட்டை சேர்ந்த மாணவர்களில் ஒருவரான வெனோ சிபோவிடம் பேட்டி கண்டது. அப்போது அவர் 'போர்க்குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜபக்சவிற்கு, பிரித்தானிய மகாராணியாருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? லண்டனுக்கு ராஜபக்ச வருவது அறிந்துகொண்டதால், நம்மில் பலர் இங்கு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் ராஜபக்ச முன்னர் என்ன செய்தார் என்பதை பிரித்தானிய மகாராணியார் மட்டும் எப்படி அறிந்திருக்காமல் இருக்கிறார்?' என கேள்வி எழுப்பினார்.
இதேவேளை இன்றிரவு ராஜபக்ச இலங்கைக்கு புறப்படும் வரை ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Photos : London Evening Standard
0 கருத்துகள்:
கருத்துரையிடுக