தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.6.12

ஜெர்மனியில் ஜெர்மன் மொழி தெரியாமல் மருத்துவ வேலை பார்க்க முடியாது. புதிய நிபந்தனையால் சர்ச்சை.


ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் மருத்துவர்கள் ஜேர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.ஜேர்மானிய மருத்துவக் கழகத்தின் தலைவரான ருடால்ஃப் ஹெங்கே கூறுகையில், ஜேர்மனிக்கு வரும் மருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது.இவர்கள் இரவுப் பணியின் போது சாப்பிட பீஸ்ஸா கேட்டு வாங்கும் அளவிற்கு மட்டும் ஜேர்மன் மொழி தெரிந்தால் போதாது.மருத்துவக் கடிதம் எழுதவும், சிகிச்சை குறித்து பரிந்துரை செய்யவும் அவர்களுக்கு ஜேர்மன்

மொழியறிவு தேவை.
உடல்நலம் சார்ந்த மொழிப் பாடத்தையும், மொழிப் பயிற்சியையும் பல மாதங்கள் பயில வேண்டும். இனி ஜேர்மானிய மொழியில் மருத்துவம், சிகிச்சை, உடல்நலம் குறித்துப் பேசவும் எழுதவும் தெரியாதவர்கள் ஜேர்மனியில் வேலை பார்க்க இயலாது என்றார்.
கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஜேர்மனிக்கு பல மருத்துவர்கள் புலம்பெயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்: