தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.5.12

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபரை சந்திக்க ஒபாமா திட்டவட்டமாக மறுப்பு.

பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அமெரிக்கப் பயணம் மேற் கொண்டுள்ள பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க மறுத்துவிட்டார்.நேட்டோ நேச நா டுகள் இடையேயான பேச்சுவார்த்தைகள் அமெரிக்க நகரா ன சிகாகோவில் நடைபெறுகிறது. நேட்டோ நேச நாடுக ளுக்கு உதவி புரிந்து வருவதால் ஆப்கானிஸ்தானும் பாகி ஸ்தானும் இதில் கலந்து கொள்கின்றன.இந்தப் பேச்சுவார் த்தைகள் நடைபெறும் வேளையில்
அமெரிக்க அதிபர் ஒ பாமாவைத் தனியே சந்தித்துப் பேச விரும்பினார் பாகிஸ் தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி. சரிந்து
வரும் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில் பராக் ஒபாமாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஜர்தாரி திட்டமிட்டார்.

 ஆனால் இரு அதிபர்கள் மட்டும் சந்திக்கும் திட்டம், இரு தரப்பு பேச்சுவார்த்தை முன்பாகவே தீர்மானிக்கப்படாததால் திடீரென்று அப்படியொரு சந்திப்புக்கு சாத்தியமில்லை என்று ஒபாமா திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி கூறினார்.

 ஆனால், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸôய்-ஒபாமாவின் திட்டமிட்ட சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்குப் பொருள்கள் எடுத்துச் செல்லும் வழியை பாகிஸ்தான் அடைத்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்கன் எல்லையில் இருக்கும் பாகிஸ்தான் எல்லைக் காவல் நிலையத்தின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ஆப்கானிஸ்தானுக்குள் எந்த ராணுவ உதவிப் பொருளையும் நேட்டோ படையினர் எடுத்துச் செல்ல முடிவதில்லை. இந்த வழித் தடத்தை உடனடியாகத் திறக்க வேண்டுமென்று அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

 இந்தப் பிரச்னையை பாகிஸ்தான் விரைவாகத் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

 இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஹஃபீஸ் சயீதின் தலைக்கு ரூ.50 கோடி பரிசை அறிவித்தது அமெரிக்கா. பாகிஸ்தானில் வெளிப்படையாக வாழ்ந்து வரும் சயீத் குறித்து அந்த நாடு இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. அவர் பாகிஸ்தானில் பல கூட்டங்களை நடத்துவதோடு நேட்டோ படைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார்.

 இது அமெரிக்காவுக்கு விடப்படும் சவாலாகக் கருதப்படுகிறது. வழித்தடங்கள் விவகாரத்திலும் சயீத் விவகாரத்திலும் பாகிஸ்தான் அரசு மும்முரமாக நடவடிக்கை எடுக்காததில் அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தி இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்காவுக்கு வந்துள்ள ஜர்தாரி, தனிப்பட்ட முறையில் ஒபாமாவை சந்தித்து சில உதவி அறிவிப்புகளைப் பெற்று, தனது பயணம் வெற்றியடைந்தது என்று கூறிக் கொள்ள நினைத்திருந்தார். இதன் மூலம் பாகிஸ்தானில் தொய்வுற்ற தனது செல்வாக்கை மீண்டும் எழச் செய்யலாம் என்று எண்ணினார். ஆனால் ஜர்தாரியை சந்திப்பதற்கு ஒபாமா நேரம் ஒதுக்கவில்லை. இரு தலைவர்கள் சந்திக்கும் திட்டமே இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஹிலாரியுடன் சந்திப்பு... அதிபர் ஒபாமாவை சந்திக்க முடியவில்லையென்றாலும், ஏற்கெனவே திட்டமிட்டபடி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார் ஜர்தாரி. ஒரு மணி நேரம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைகளின்போது, முக்கிய விஷயமாக, ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது, அமெரிக்க உதவித் தொகையை அதிகரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

 நேட்டோ படைகளுக்குப் பொருள்கள் எடுத்துச் செல்லும் வகையில் எல்லை வழிகளை மீண்டும் திறப்பது, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் அந்தப் பிராந்தியத்தை அச்சுறுத்தும் அல்-காய்தா, ஹக்கானி உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி ஹிலாரி வலியுறுத்திப் பேசினார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு, ஸ்திரத் தன்மை ஆகியன குறித்தும் பேசினார்.

 பாகிஸ்தான் மக்கள் மனதில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு நிலை, இரு நாடுகளிடையே நிலவும் நம்பிக்கைப் பற்றாக்குறை பற்றி ஜர்தாரி எடுத்துக் கூறினார். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளில் பாகிஸ்தான் திரும்பவும் ஈடுபடுவது சற்றே கடினமாகியிருக்கிறது என்று ஜர்தாரி கூறினார்.

 மேலும் அமெரிக்காவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் முதலீடுகள் செய்யும் திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்கள் பேசினர் என்று பாகிஸ்தான் அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் தெரிவித்தார்.

 கர்ஸôய்-ஜர்தாரி சந்திப்பு... நேட்டோ கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸôய், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இவர்களுடைய சந்திப்பு 45 நிமிஷங்கள் நடைபெற்றது.

 ஆப்கானிஸ்தானைத் தாக்கும் சக்திகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுக்காது என்று கர்ஸôயிடம் ஜர்தாரி உறுதியளித்தார்.

 துர்க்மினிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா நாடுகளிடையே எரிவாயு குழாய் அமைப்பது, ரயில் போக்குவரத்து அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அவர்கள் பேசினர் என்று

 பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி கூறினார்.

0 கருத்துகள்: